Categories
அரசியல்

கனவு பலிக்காது….. நாங்க சொல்றவங்க தான் அடுத்த முதல்வர்…. பாஜக தலைவர் பேட்டி…!!

இனி வரக்கூடிய நாட்களில் தமிழக மக்கள் அதிகம் பார்க்கக் கூடிய பிரேக்கிங் செய்திகளாக எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தல் குறித்த தகவல்கள்தான் நிறைந்திருக்கும். தேர்தலுக்கான காலம் நெருங்கிக் கொண்டே இருக்கும்பட்சத்தில், அதற்காக போட்டியிட தயாராக இருக்கும் கட்சிகள் தங்களுடைய நிறைகளையும், எதிர்க்கட்சிகளின் குறைகளையும் கூறி தங்களது அனல்பறக்கும் பேச்சுகளால் மக்களை கவர நினைப்பார்கள். சில வாரங்களுக்கு முன்பு வரை அதிமுக கட்சியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து பல்வேறு விதமான சர்ச்சை கருத்துக்கள் வலம் வந்தன.

தற்போது அதிமுக, திமுக, பாஜக ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே சர்ச்சை கருத்துக்கள் நிலவி வருகின்றன. இந்த வரிசையில், பாஜக மாநில தலைவர் எல் முருகன் ஸ்டாலின் அவர்கள் காணும் கனவு நிச்சயமாக நிறைவேறாது. முதல்வராக வேண்டும் என்கிற அவரது கனவு கனவாகவே போய்விடும். எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக மக்கள் திமுகவுக்கு சரியான பாடத்தை புகட்டுவார்கள். அதுமட்டுமல்லாமல், தேர்தலில் பாஜக சுட்டி காட்டுபவரே கோட்டையில் முதல்வராக அமர முடியும் என்றும்  கூறியுள்ளார். 

Categories

Tech |