பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் முடிந்து பதவியேற்ற மூன்று நாட்களில் பாஜகவைச் சேர்ந்த கல்வி அமைச்சர் மேவலால் சவுத்ரி பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வந்த நிலையில், இந்த ராஜினாமா நிகழ்வு அரங்கேறியுள்ளது. அதிலும் குறிப்பாக,
இவர் வேளாண் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பதவி வகித்தபோது, பதவி நியமனங்களில் பல முறைகேடுகள் செய்ததாக அவர் மீது முக்கிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் தன் மீதுள்ள ஊழல் புகார் காரணமாக பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். மேலும் சமீபத்தில் தேசிய கீதத்தை தவறாக பாடிய அவரது வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.