திருச்சியில் கொலை செய்யப்பட்ட பா.ஜ.க நிர்வாகி விஜயரகுவின் குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.
திருச்சி மாவட்டம் பாலக்கரை பாஜக மண்டலத் துணைத் தலைவர் விஜயரகு என்பவர் காந்தி மார்க்கெட் சாலையில் நேற்று முன்தினம் அதிகாலை அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக வரகனேரியைச் சேர்ந்த மொபைல் லாட்டரி வியாபாரி மிட்டாய் பாபு என்ற முகமது பாபு என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே குற்றவாளிகளை சீக்கிரமாக விரைந்து கைது செய்ய வேண்டும் என பாஜக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இன்று காலை திருச்சிக்கு சென்று, கொல்லப்பட்ட விஜயரகுவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் பா.ஜக சார்பில் விஜயரகுவின் குடும்பத்திற்கு ரூ.50,0000 நிதியுதவியை, அவரது மனைவியிடம் வழங்கினார். முன்னதாக விஜயரகு காந்தி மார்க்கெட்டில் கொல்லப்பட்ட இடத்தையும் பார்வையிட்டார் ஹெச்.ராஜா.