அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா பாஜகவில் இணைத்துள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை தனது கரங்களை வலுப்படுத்த வேண்டும் என்பதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள்.ஏற்கனவே நயினார் நாகேந்திரன் அதிமுகவிலிருந்து பாஜகவில் இணைத்தார். தற்போது அவர் முக்கிய பொறுப்பில் இருப்பதை நாம் பார்க்க முடிகின்றது. இந்த நிலையில் சசிகலா புஷ்பா அவர்களும் கடந்த 6 மாதமாக பாரதிய ஜனதா கட்சியில் இணையலாம் என்று ஒரு பேச்சு இருந்து வந்த நிலையில் தற்போது இணைந்துள்ளார்.
சசிகலா புஷ்பாவை பொறுத்தவரை அதிமுகவின் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்திருக்கின்றார்.குறிப்பாக மகளிர் அணியில் முக்கிய பொறுப்பு வகித்து வந்தார். அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கின்றார்.ஜெயலலிதா அவர்களுடன் நெருங்கிய நட்பில் இருந்தார்.அதற்குப் பிறகு அவருடன் ஏற்பட்ட முரண் நாம் அனைவருக்கும் தெரியும். ஒட்டுமொத்தமாக அதிமுகவை எதிர்த்து நிற்கக் கூடிய இடத்தில் இருந்தாலும் கூட அதிமுகவினர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அவருக்கு எதிரான நடவடிக்கைகள் எதையும் எடுக்காமல் தான் இருந்தார்கள்.
அதைத் தொடர்ந்து அவர் கட்சி சார்ந்த பணிகளில் ஈடுபடாமல் இந்த நிலையில் தற்போது புதிதாக தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டுள்ளார். வரக்கூடிய சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு தான் இருக்கின்றது. பெரிய அளவிலான தேர்தல் பணிகள் தொடங்குவதற்கு எதுவாக அனைத்து தரப்பிலும் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு தீவிரமான முயற்சிகளை , குறிப்பாக முக்கிய நபர்களை , மற்ற கட்சிகளில் இருக்க கூடிய நபர்களையும் , முக்கிய தலைவர்களையும் பாரதிய ஜனதா கட்சியின் இணைக்கும் பணியில் அக்கட்சி தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது.
LIVE: An Eminent personality joins BJP at BJP HQ, New Delhi. https://t.co/XwbZ2rMiwl
— BJP (@BJP4India) February 2, 2020