Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தலில் பாஜக கூட்டணி ? ”ஸ்டாலின் தொகுதியில் போட்டி” எடப்பாடி அரசு சூப்பர் …! வெளுத்து வாங்கிய சீமான் ..!!

தமிழக அரசு இந்த ஆண்டு குடிமராமத்து பணிகளை கொஞ்சம் நன்றாக செய்துள்ளது என சீமான் பாராட்டியுள்ளார்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்,  பீகார் தேர்தல் முடிவை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு தேர்தல் முடிவில் மறுபடியும் EVM இயந்திரம் வென்றுள்ளது என்றுதான் நான் பார்க்கின்றேன். அவர்கள் ராமரை நம்புவதை தாண்டி EVM எந்திரத்தை தான் ரொம்ப நம்புறாங்க. என்னை கேட்டால் பிஜேபி யாரோடும் கூட்டணி வைப்பது இல்லை, EVMமுடன் தான் கூட்டணி வைக்கிறார்கள்.

சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றோம். ஸ்டாலினை எதிர்த்து நான் போட்டியிட வேண்டும் என்று அனைவரும் நினைக்கின்றார்கள். நானும் நிற்கலாம் என்று நினைக்கின்றேன், அதை அப்புறம் யோசிப்போம். நீர் மேலாண்மையில் தமிழகம் எப்படி இருக்கின்றது என கேள்விக்கு… சென்ற  ஆண்டு எப்படி இருந்ததோ… அதற்கு முன்பு எப்படி இருந்ததோ… அப்படித்தான் இப்போதும் இருக்கிறது.

ஆனால் கொஞ்சம் குடிமராமத்து பணிகள் சில ஊர்களில், கிராமங்களில், கண்மாய் ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளதை பயணம் செய்யும்போது நான் பார்க்கின்றேன். இந்த ஆண்டு குடிமரமத்து பணிகள் இந்த ஆண்டு பரவாயில்லை என்று நான் நினைக்கின்றேன். தண்ணீர் பஞ்சம்   இருக்கக்கூடாது என சீமான் தெரிவித்தார்.

Categories

Tech |