மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 322 இடங்களில் முன்னிலை வருகின்றது.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி மே 19_ஆம் தேதி வரை நடைபெற்றது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை தபால் வாக்குகளை எண்ணிக்கையுடன் தொடங்கிய வாக்குப்பதிவு முன்னிலை நிலவரம் வெளிவந்து இருக்கின்றது.
காலை முதல் வெளிவந்த முன்னிலை விவரங்களில் தேசியளவில் பாரதீய ஜனதா கூட்டணி 322 மேற்பட்ட இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. அதே போல தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அதிகப்படியான இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன.