Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச்…. காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்தின் அதிரடி கருத்து….!!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ரபேல் வாட்ச் விவகாரம் தமிழக அரசியலில் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி அண்ணாமலையிடம் ரஃபேல் வாட்ச் விலை ரசீதை பொதுவெளியில் காண்பிக்குமாறு சவால் விட்டுள்ளார். இதனால் திமுக மற்றும் பாஜகவுக்கு இடையே அடிக்கடி வார்த்தை போர் நிலவி வருகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்திடம் ரபேல் வாட்ச் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் நாட்டில் வேலை வாய்ப்பின்மை, பொருளாதார வீழ்ச்சி என பல்வேறு பிரச்சினைகள் இருக்கும்போது அதைப் பற்றி விவாதிக்காமல் வாட்ச் குறித்து விவாதிப்பது தேவையற்றது என்று கூறினார். மேலும் கார்த்தி சிதம்பரம் ஏற்கனவே காங்கிரஸ் தலைமை குறித்து அதிருப்தி கருத்துகளை தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |