கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்றுவந்த, அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டவும் இஸ்லாமியர்கள் மசூதி கட்டிக்கொள்ள ஐந்து ஏக்கர் மாற்று இடமும் ஒதுக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, இந்த நாள் இந்திய வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டும்.
தீர்ப்பை அனைவருமே ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் நவம்பர் 24 அன்று அயோத்திக்குச் செல்வேன் என்று கருத்து தெரிவித்தார்.மேலும் இதற்காக ரதயாத்திரை மேற்கொண்ட எல்.கே. அத்வானியை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கவுள்ளேன் என்றும் அயோத்தி தீர்ப்பின் முடிவை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு சொந்தம் கொண்டாட முடியாது எனவும் கூறியுள்ளார்.