செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அண்ணன் எடப்பாடி தெளிவா சொல்லிவிட்டார். எந்த நிலையிலும் எங்க தலைமையில்தான் கூட்டணி இருக்கும். எங்க தலைமையில் வருகின்ற கூட்டணியில் நாங்கள் ஒதுக்கின்ற இடம்தான். எங்களை யாரும் வற்புறுத்த முடியாது. எங்களை யாரும் டிமாண்ட் பண்ண முடியாது.
கடந்த தேர்தலிலும் சுமூகமாக பேச்சுவார்த்தை எல்லாம் தொடங்கப்பட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான கூட்டணியில் எந்தெந்த கட்சி பங்குபெற்றதோ, அது நாங்க ஒதுக்குன இடம் தான் என்பது ஊரறிந்த ஓன்று, அதான் வரலாறு.
எங்க தலைமையில் தான் 2024-ல கூட்டணி அமையும். கூட்டணி அமைகின்ற பட்சத்தில் நாங்கள் ஒதுக்குற சீட்டு தான். எடப்பாடி என்ன சொல்லி இருக்காங்க ? அந்த கூட்டணியில் டிடிவியோ, சசிகலாவோ, ஓபிஎஸ்யோ இவுங்க மூணு பேரு மொத்தமா வந்தாலும் சரி, அல்லது தனித்தனியாக வந்தாலும் சரி, எந்த நிலையிலும் கூட்டணியிலும், கட்சியிலும் சேர்த்துக் கொள்வதாக இல்லை. நாடாளுமன்ற தேர்தலுக்கான வேலை எல்லாம் ஸ்டார்ட் பண்ணிட்டோம். பூத் கமிட்டி வேலை எல்லாம் நடந்துகிட்டு இருக்கு என தெரிவித்தார்.