மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் இரண்டாவது முறையாக பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் கடந்த 21_ஆம் தேதி நடைப்பெற்றது. இந்த இரண்டு மாநிலங்களிலும் ஆட்சியில் இருக்கும் பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும், காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் தேர்தலை சந்தித்தனர். தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அதற்கான முடிவுகள் இன்று காலை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றது.
288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக , சிவசேனா கூட்டணி அமைத்தும் , காங்கிரஸ் , தேசிய வாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தனர். பெரும்பான்மைக்கு 145 தொகுதிகள் தேவையான நிலையில் பாஜக கூட்டணி 156 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது. பிற கட்சிகள் 28 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றனர்.இதனால் மஹாராஷ்டிராவில் தொடர்ந்து இரண்டாவது முறை பாஜக கூட்டணி ஆட்சி உறுதியாகியுள்ளது.