7 பேர் விடுதலையில் ஆளும் பாஜகவும் , ஆண்ட காங்கிராஸ்ஸும் அரசியல் செய்வதாக வேல்முருகன் விமர்சித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறுங்கியில் , மத்தியில் இருக்கக்கூடிய காங்கிரஸ் , பிஜேபி க்கு எந்த வேறுபாடும் இல்லை. அவர்களுக்கு தமிழர்கள் என்றாலே கிள்ளுக்கீரை . 7 பேர் விடுதலை , பரோல் விடுப்பு என தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி நீதிமன்றம் தான் வழங்குகின்றது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு பிரிவு 161ஐ பயன்படுத்தி மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு அவர்களை விடுதலை செய்யலாம் என்று தெரிவித்தது.
இதில் யாரும் கேள்வி கேட்கமுடியாது என்று நீதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் அதை கூட இன்று மத்திய அரசு கருத்தில் கொள்ளாமல் இருக்கின்றது. பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் விடுதலை செய்ய ஏன் காலதாமதம் பண்ணுறீங்க என்று நீதிமன்றமே தெரிவித்தும் கூட இன்னும் விடுதலை செய்யாமல் காலதாமதம் படுத்தி மத்திய பாஜக அரசும் , காங்கிரஸ்சும் இதில் அரசியல் செய்கின்றது என்று தெரிவித்தார்.