Categories
அரசியல்

“தொடர்ந்து சரிந்து கொண்டே போகுதே”…. என்ன பண்ணலாம்…. திடீர் ஆலோசனையில் குதித்த கர்நாடகா பாஜக….!!!

கர்நாடகாவில் பாஜகவின் மூன்று நாட்கள் ஆலோசனைக் கூட்டமானது, பெங்களூரில் வரும் வெள்ளிக்கிழமை அன்று தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற மேலவை மற்றும் உள்ளாட்சி தேர்தலில் பாஜக-விற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. அதனை சரி செய்வதற்கு என்ன செய்யலாம்? என்பது தொடர்பிலும், கட்சியை பலமாக்குவது தொடர்பிலும் விவாதிப்பதற்காக ஆலோசனை நடத்துவதற்காக 3 நாட்கள் கூட்டத்திற்கு கர்நாடகாவின் பாஜக ஏற்பாடு செய்திருக்கிறது.

பெங்களூரில் வரும் வெள்ளிக்கிழமையிலிருந்து தொடர்ந்து மூன்று நாட்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடக்கவிருக்கிறது. இதில், கட்சியை பலமாக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது. பாஜகவின் வாக்கு வங்கி, இந்த தேர்தலில் சரிவை அடைந்திருக்கிறது.

தொண்டர்களுக்கிடையிலும், ஒருவிதமான சளிப்பு உண்டானது. எனவே முக்கியமாக இக்கூட்டத்தில் கட்சியை பலப்படுத்துவது தொடர்பிலும் இழப்பை ஈடுகட்டுவது தொடர்பிலும் விவாதிக்கப்பட இருக்கிறது. இது மட்டுமன்றி திறமை குறைந்த அமைச்சர்களை நீக்கம் செய்து விட்டு, புதிதாக அமைச்சர்களை நியமிப்பதற்கு முதல்வர் பசவராஜ் தீர்மானித்திருக்கிறார்.

Categories

Tech |