ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக பாஜக நிர்வாகிகள் தற்போது புகார் செய்திருக்கிறார்கள்.
பாஜக நிர்வாகி புகாரிலேயே பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டு இருக்கின்றார். மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் புகார் தந்த பிறகு சுரேஷ்குமார், கலையரசன் தரவேண்டிய பணத்துக்கு செக் தந்ததாகவும், அது வங்கியில் பணம் இன்றி திரும்பியதாகவும் புகார். 2017-இல் வழங்கிய பணத்தை கொடுக்காமல் ஐந்து ஆண்டுகளாக ஏமாற்றியதாக போலீசில் புகார் அளித்துள்ளார் பாண்டியன்.
நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் பாஜக மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட செயலாளர் கலையரசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி 9 லட்சம் மோசடி செய்ததாக விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக செயலாளர் கலையரசன் கைது செய்யப்பட்டுள்ளார். ரூபாய் 9 லட்சம் பெற்று ஏமாற்றியதாக பாஜக மாவட்ட தலைவர், செயலாளர் மீது அக்கட்சியை சேர்ந்த நிர்வாகி மோசடி புகார் கொடுத்துள்ளார்.