12 வது வகுப்பு மாணவியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
திருப்பூர் மணியகாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ராஜ். இவர் அங்குள்ள பனியன் கம்பெனியில் தையல் கண்டக்டராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் அந்த பகுதியில் உள்ளவர்களை வேலைக்கு அழைத்து செல்வது வழக்கம். அதே போன்று அதே பகுதியில் உள்ள 12ஆம் வகுப்பு பயின்று வரும் 17 வயது மாணவியை விடுமுறையில் வேலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கி உள்ளார். இதையடுத்து சிறுமி இது குறித்து தன்னுடைய தாயிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் திருப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.