Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மாவட்டம் முழுவதிலும்… 228 இடங்களில் பாஜக நிர்வாகிகள்… கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பாஜக நிர்வாகிகள் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் அவ்வபோது சில தளர்வுகளை தமிழக அரசு அறிவிக்கின்றது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் பாஜக நிர்வாகிகள் அவர்களது வீட்டின் முன்பு பலகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போதைய காலகட்டத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பது சிறந்த வழிமுறையாக இருக்காது என்றும், சமூக சீர்கேடுக்கு வழிவகுக்கும் என அவர்கள் கூறியுள்ளனர். எனவே டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு அனுமதி அளிக்கக்கூடாது என கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் முழுவதிலும் 228 இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

Categories

Tech |