Categories
அரசியல் மாநில செய்திகள்

”வீட்டுக்கு CBI சென்றது பாஜகவின் பயம்” நடிகை குஷ்பூ கருத்து…!!

பா சிதம்பரம் வீட்டுக்கு CBI சென்றது பாஜகவின் பயத்தை காட்டுகின்றது என்று நடிகை குஷ்பூ விமர்சித்துள்ளார்.

கடந்த 2007ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் வெளிநாட்டிலிருந்து ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேட்டு வழக்கில் முன்ஜாமீன் கேட்ட வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டிற்கு CBI மற்றும் அமுலாக்கத்துறையினர் சென்றனர்.

Image result for நடிகை குஷ்பூ

ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் இரத்து செய்யப்பட்ட நிலையில் அவரை கைது செய்ய CBI மற்றும் அமலாக்கத்துறையினர் முனைப்பு காட்டி வருகின்றார்கள்.இதனால் அவர் கைது செய்யப்படுவர் என்று அரசியல் பரபரப்பு எழுந்தது.இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த நடிகை குஷ்பூ கூறுகையில் , பா சிதம்பரம் வீட்டுக்கு CBI சென்றது பாஜகவின் பயத்தை காட்டுகின்றது. இதை ப.சிதம்பரம் சட்டரீதியாக சந்திப்பார் என்று குஷ்பூ தெரிவித்துள்ளார்.

Categories

Tech |