Categories
அரசியல் மாநில செய்திகள்

4 கால் பாய்ச்சலில் BJP…! சிறைக்கு அஞ்ச மாட்டோம்… PTRமீது காலணி வீச்சில் நடந்தது என்ன ? பிஜேபி பரபரப்பு விளக்கம் ..!!

பயங்கரவாதிங்களின் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த டி.புதுப்பட்டியைச்  சேர்ந்த ராணுவ வீரர் லெட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பிய போது அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசினர். அரசு சார்பில் அஞ்சலி செலுத்திய பிறகு, பாஜக சார்பில் அஞ்சலி செலுத்த அனுமதி என்று கூறியதால் அமைச்சர் கார் முற்றுகையிடபட்டு,  அவரின் கார் மீது காலணி வீசப்பட்டது. இது தொடர்பாக  ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

11 மணி;

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விளக்கம் கொடுத்துள்ள மதுரை மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன், இன்று (13.08.2022) காலை சுமார் 11 மணியளவில் மதுரையில் வந்திருக்கக்கூடிய தகவல் நமக்காக, தேசத்திற்காக உயிர் நீத்த நம்முடைய அன்பு சகோதரர் லட்சுமணன் அவர்கள்…  புதுப்பட்டியை சேர்ந்த லட்சுமணன் அவர்களுடைய பூத உடல் ஏர்போர்ட்டுக்கு வருது. 11:30 மணிக்கு வருகிறது. அவருக்கு அங்கே அரசு இறுதி மரியாதை எல்லாம் முடித்துவிட்டு, சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு இறுதிச்சடங்கு நடக்கப்படுகிறது என்று எல்லோருக்குமான செய்தி வருகின்ன்றது.

தமிழக மக்கள் உணர்ச்சிவசப்பட்டவர்கள்:

நாங்கள் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்காக…. அத்தனை பேரும் பாரத பிரதமர் உத்தரவின் பேரில் இந்தியா முழுவதும், தமிழகத்திலேயும் அனைவரும் ஒரு ஆர்வத்தோடு அதை எடுத்துக்கொண்டு போய்க்கிட்டு இருக்கிறோம். அப்ப வந்து நமக்காக உயிர் நீத்த தம்பியின் உடல் வருகிறது என்று எல்லாருக்குமான மன உணர்வில் அங்கே திரளுகிறோம். விமான நிலையத்துல பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த தொண்டர்கள் எல்லாம் திரளுகின்றோம். பக்கத்துல இருக்கின்ற அவருடைய கிராமத்தில் இருந்து பொதுமக்கள் எல்லாமே அங்கு வந்திருந்தாங்க. தமிழக மக்கள்  எவ்வளவு உணர்ச்சிவசப்பட்டவர்கள் என்று தெரியும் ?

மாநில தலைவர் வாராங்க:

அப்போது போலீஸ் பேரிக்கர்டு எல்லாம் போட்டு இருக்கிறார்கள். நாங்கள் பேரிக்காட்டுக்கு வெளியே மரத்து நிழல்ல நின்று கொண்டிருக்கிறோம். அப்போ அந்த கர்னல் என்னை கூப்பிடுகிறார்.  எனக்கு தெரிஞ்சதனால கூப்பிட்டு பேசிகிட்டு இருக்காரு, அப்போ நான் சொல்றேன், எங்களுடைய மாநில தலைவர் வாராங்க. அவருக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கோம். அவர் வந்த உடனே என்ன சார் பாதுகாப்பு என்று சொல்லும்போது…

மொத மினிஸ்டர், அடுத்து கலெக்டர்,  கமிஷனர்,  அரசு அதிகாரிகள் முடித்த உடனே ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கு கொண்டு சென்று, அங்கு  பொதுமக்களுக்கான நேரம் இருக்கும் என சொல்கிறார். சரி சார் என்று நாங்கள் கேட்டுக் கொண்டு இருந்தோம். அப்போது அமைச்சரின் கார் அந்த இடத்திற்கு வருகிறது. அப்போ மதுரையில அமைச்சர் இருக்கிறார் பிடிஆர் தியாகராஜன்.

ஒன்றிய அரசு என பேச ஆரம்பித்தவர்:

காரில் இருந்து இறங்கி வந்து என்ன தகுதி இருக்கு இங்க வரீங்க ? அப்படின்னு சொல்றாரு. அப்போ நாங்க சொல்றோம்…  எங்களுக்காக,  இந்திய நாட்டிற்காக உயிர் தியாகம் செய்திருக்கக்கூடிய ஒரு உயிருக்கு, ஒரு ஆண் மகனுக்கு,  அஞ்சலி செலுத்துவதற்கு இந்தியனாக இருக்கின்ற தகுதியே போதும்,  அப்படினு சொல்றோம். எங்களுடைய கேள்வி அவருக்கு என்ன தகுதி இருக்கு ? ஒன்றிய அரசு என பேச ஆரம்பித்தவர்.

தமிழ்நாடு என்கிற பிரிவினை வாரியத்தை தூண்டக்கூடிய அமைச்சர். அவருக்கு இருக்கும் தகுதியை விட, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அடிப்படை தொண்டனுக்கு தகுதி இருக்கிறது. நமக்காக உயிர் நீத்த ஆண் மகனுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தகுதி இருக்கிறது. நாங்க வந்து அரசினுடைய வேலைகளை எதிலும் இடைஞ்சலாக இருந்தோமா இல்ல.  அரசு அதிகாரிகள் மரியாதை செய்து முடித்த பிறகு, நாங்கள் மரியாதையை செய்ய போறோம்.

தலைக்கனம் பிடித்தவர்:

இன்னும் சொல்லப்போனால் லட்சுமணன் யாருங்கிறது இந்த அமைச்சருக்கு தெரியாது ? லட்சுமணன் யாருங்கிறது அவருக்கு வைத்திய பார்த்த சரவணன் எனக்கு தெரியும். சரவணன் எனக்கு அந்த குடும்பத்தை பத்தி தெரியும். அந்த ஊரை பற்றி தெரியும். ஊரில் நான் தங்கி இருக்கிறேன்.  எனக்கு அந்த ஊரை பத்தி தெரியும். அந்த அமைச்சருக்கு தெரியுமா ? அமைச்சர் என்ற ஒரே பொறுப்பிற்காக மட்டுமே தகுதி இருக்கு.மதுரையில் என்ன செல்வாக்கு இருக்கிறது இந்த அமைச்சருக்கு ? கேட்கிறேன். கட்சியை வைத்து ஜெயிச்சு  வந்திருக்கிறார். அவருக்கு வேற என்ன தகுதி இருக்கு ? தலைக்கனம் பிடித்தவர்.  எங்களை என்ன தகுதி என்கின்றார் ?

சவால் விடுகிறேன்:

நான் சவால் விடுகின்றேன். இன்னைக்கு அவருடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா பண்ண சொல்லுங்க. அதே மாதிரி மத்திய தொகுதியில் அவர் போட்டியிடட்டும். அவரை எதிர்த்து பாஜக சார்பாக டாக்டர் சரவணன் தான், எங்க தலைவரிடம் அனுமதி வாங்கிட்டு, நான் போட்டியிடுறேன். அவர் வென்று காமிக்கட்டும். நான் சொல்கின்றேன்,  சவால் விடுகிறேன் இந்த அமைச்சருக்கு ? அமைச்சர்  வருத்தம் தெரிவிக்க வேண்டும்.  பத்திரிகைகளை நான் வர சொன்னதே இந்த விவகாரத்தை  திசை திருப்புகிறார். அவர் பொதுமக்களை பார்த்து இவங்கல எல்லாம் யாரு விட்டதுனு?  ஏன் உள்ளே விட்டீங்க அப்படின்னு மக்களை பார்த்து கேட்கிறார்.

இவர்கள் எல்லாம் ஓட்டு போட்டு தான் அவர் அமைச்சராக இருக்கிறார்.  எம்எல்ஏவாக இருக்கின்றார். அவருக்குக்காக யாரும் ஓட்டு  போடல. இந்த கட்சிக்காக போட்டிருப்பாங்க. அவங்க கட்சிக்கு ஓட்டு போட்டவர்கள் தான் அந்த கூட்டத்தில் இருந்திருப்பான். அது உங்க கட்சிக்கு ஓட்டு போட்டவன். அவங்கள பாத்து கேக்குறாரு ? அப்போ நாங்க ,எங்க தலைவர் வருகிறார் வந்தவுடனே அனுமதி கொடுக்குறாங்க .  நாங்க அஞ்சலி செலுத்திட்டு வாரோம். அந்த  இடத்துல எந்த விதமான கசகசும் இல்லாம கலைந்து வருகின்றோம்.

கொதித்து போய் இருக்காங்க:

அப்பதான் நாங்கள் கேள்விப்படுகிறோம்.  அமைச்சர் அவர்கள் வெளியே போகும்போது அவர் காரை மறித்து,  வாக்குவாதம் பண்ணாங்கன்னு சொல்றாங்க. உடனே அதை பிஜேபிகாரன் என ஏன் சொல்றீங்க ?  எங்கேயாவது பிஜேபி கொடி இருந்துச்சா ? இல்ல பிஜேபி கொடியோடு  நின்னுட்டு இருந்தாங்களா? இவர் பேசிய பேச்சுக்கு மதுரையே கொதித்து போய் இருக்கு. திமுக காரங்களே கொதித்து போய் இருக்காங்க.

திமுகவில் அடிப்படை உறுப்பினதாக இருக்கும் திமுக காரங்கள் இன்னைக்கு என்ன சொல்றாங்க ? டாக்டர் அவருக்கு ஏதாவது சொல்லுங்க டாக்டர். தாங்க முடியலன்னு சொல்றாங்க. அத்தகைய தலைக்கனம் பிடித்த அமைச்சர் அவர். இவரையெல்லாம்  மாண்புமிகு சிஎம் என்ன செஞ்சிருக்கணும் ? பொறுப்பிலிருந்து அவரை அகற்ற வேண்டும்.  மதுரைக்கு வந்த கேடு இவர். பண்பாளர் என்று போஸ்ட் போடுறாங்க. பண்பு இல்லாதவர்க்கு பண்பாளர் என்ற போஸ்ட் வேற.

சட்டரீதியாக அணுகுங்க:

நம்ம தமிழ் கலாச்சாரம் என்னங்க ? ஒரு இறந்த வீட்டுக்கு போறவுங்களை எதிரியா இருந்தபோதும்,  உள்ளே விடுவாங்க. சண்டையை அப்புறம் வைச்சுப்பாங்க. அத்தகைய தமிழ் சமூகத்தில் பிறந்து வந்திருக்கிறோம்.  இந்த அமைச்சருக்கு  தமிழே  தெரியாது. தமிழை கொதரக்கூடிய ஒரு அமைச்சர். எந்த அளவுக்கு அங்கு நடந்திருக்கிறார். தரம் தாழ்ந்து நடந்திருக்கிறார். அமைச்சர் என்ற பொறுப்பிற்கு மரியாதை இல்லாமல் நடந்திருக்கிறார்.

எங்களை இங்கே வைத்து மரியாதை செய்யக்கூடாது என்றால்,  பத்து கிலோமீட்டர்கூட  நாங்க நடந்தே போவோம். அந்த வைராக்கியம் உள்ள ஆட்கள் நாங்கள். அப்போ வெளியே போங்கன்னு ஒரு தகவல் வருது. அதனால் வெளியே நடந்த சம்பவம் எங்களுக்கு தெரியல. நாங்க என்னமோ அந்த சம்பவத்தை  செஞ்சமா ? இவருக்கு எதிராக  பொதுமக்கள்  கொதிச்சு போய் இருக்காங்க. எவ்வளோ இடங்களில் மக்கள்  போராட்டங்கள் பண்ணிக்கிட்டு இருக்காங்க. அந்த வகையில நடந்ததை நீங்க  சட்டரீதியாக அணுகுங்க. நாங்களும்  சட்டரீதியாக என்ன செய்கிறோமோ ? அதை செய்றோம். இந்த அமைச்சர்  வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

மக்களை  சந்திக்காத அமைச்சர்:

நமக்காக உயிர் கொடுத்த ஒரு ஆன்மாவிற்கு அஞ்சலி செலுத்த வந்த மக்களை இந்த அளவுக்கு இவங்க எல்லாம் யார் இவர்களை விட்டது என்று கேட்டுள்ளார். அமைச்சரை பொறுப்பில் இருந்து மாண்புமிகு முதல்வர் எடுக்க வேண்டும்.  இந்த அமைச்சர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் இவர் எந்த நிகழ்ச்சியில்  கலந்து கொண்டாலும், பாரதிய ஜனதா கட்சிக்காரன் ஒருத்தன் இருந்தாலும் அந்த இடத்துல அறவழியில்  எதிர்ப்பை காண்பிப்போம். உணர்வுள்ள எந்த தமிழரும், எந்த மதுரைகாரனும் நிச்சயமாக அவருக்கு எதிர்ப்பை எங்கு சென்றாலும், பதிவு செய்வான் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் மிக தமிழகம் முதல்வருக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன.  இத்தகைய அமைச்சரை,  மக்கள் நலன் பாராட்டாத அமைச்சரை,  மக்களையே சந்திக்காத அமைச்சரை,  நிச்சயமாக பதவியில் இருந்து எடுக்க வேண்டும். மதுரை மக்கள் மனம் குளிரும் வண்ணம்,  தமிழக முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் அவருக்கு வைக்கின்றேன்.உடலுக்கு அஞ்சலி செலுத்த ஒட்டுமொத்தமா பொதுமக்கள் போறாங்க. அமைச்சராக இருக்கக்கூடிய ஒருத்தரு,  இவங்க எல்லாம் யாரு உள்ளே விட்டது ? என்று சொல்றாரு.

சண்டையை மூட்டி விடுறாங்க:

அவர் அமைச்சராக இருந்தாலும், மேலே கைவைத்து இருந்தால், அந்த இடத்தில்  நகர  முடியாது. சிறைக்கு அஞ்சுபவர்கள் நாங்கள் கிடையாது. அமைச்சராக இருந்த அவர், கையை ஓங்கி இருந்தா நடந்தது வேற மாதிரி இருக்கும்.தமிழ்நாடு அண்ணாமலை வந்த பிறகு நாலு கால் பாய்ச்சலில்  போயிட்டு இருக்கு. பிஜேபிக்கு மதுரையில் எவ்வளவு மக்கள்கிட்ட ஆரவாரமான வரவேற்பு இருக்கின்றது என்று எங்கு பார்த்தாலும் தெரியும். பல்வேறு கட்சி தொண்டர்கள் தங்களை பாஜகவில் இணைச்சுட்டு இருக்காங்க.

திமுக காரங்க ஃபுல்லா அவங்களுடைய உள்கட்சித் தேர்தல் முடிஞ்சதுக்கு பிறகு, வர்றதுக்கு சாரை சாரையாக காத்துட்டு இருக்காங்க. முதல் தடவையா கட்சியில சேரணும்னு வந்த நியூட்ரலான பசங்க எத்தனை பேர் உள்ளே  வந்திருக்காங்க. இன்னைக்கு பிஜேபி பத்தி மக்களுக்கு புரிகிறது.இத்தனை நாள் திராவிட கட்சிகள் பிஜேபி பற்றி தவறான ஒரு சித்தாந்தத்தை கொண்டு போய் சேர்த்து இருந்தாங்க. திராவிட கட்சிகள் ஜாதி, மதத்தை ஒன்றிணைக்க கூடிய ஒரு கட்சி. வாக்கு வங்கி அரசியலுக்காக அந்த நெருப்பு அணையாமல் பார்த்துக் கொள்ளக்கூடிய திராவிட கட்சிகள், மத சண்டையை மூட்டிவுட்டு, எல்லா மதத்தினருக்கும்,  சமுதாயத்துக்கும் சண்டையை மூட்டி விடக் கூடிய கட்சிகள்.

தமிழ்நாட்டில் 25 எம்பி சீட்டு:

ஆனால் பிஜேபி  திராவிட கட்சி போல கிடையாது என மக்கள் தெளிவா புரிஞ்சு இருக்காங்க. அது எங்களை மாதிரி படித்தவர்கள் எல்லாம் உள்ள இருக்கறதுனால,  மக்களுக்கு இந்த செய்தி வேகமாக போய் சேருகிறது. அதை பொறுத்துக் கொள்ள முடியாதவர்  இந்த அமைச்சர்.இவரு மரியாதையை செலுத்த வந்தவுடனே அதிமுகவை பார்த்து சொல்லி இருக்க வேண்டிதானே. அவங்க திமுககாரங்களை பார்த்து…. நீ எல்லாம் உள்ளே வரக் கூடாது.  வெளியே போ என  சொல்ல வேண்டியது தானே. அது சொல்ல முடியாது. அமைச்சர் பிஜேபியை மட்டும் பார்த்து சொல்கிறார்கள் என்றால்,  அவருக்கு இருக்கக்கூடிய  காழ்ப்புணர்ச்சி தெரிகிறது.

உறுதியாக சொல்கிறேன் 2024 தேர்தலில் அண்ணாமலை அவர்கள் சொன்ன மாதிரி 25 எம்பி சீட்டு தமிழ்நாட்டில் நிச்சயம் என மக்கள் முடிவு பண்ணிட்டாங்க. இது பொதுமக்களோட உணர்வு. அந்த இடத்துல  பேசிக்கிட்ட அவுங்க  உணர்வு அது தான்.இத்தகைய மோசமான அமைச்சருக்கு எங்களை பேச என்ன  தகுதி இருக்கிறது ? அவர் அமைச்சர், எம்.எல்ஏ  பொறுப்பில் இருந்து  ராஜினாமா பண்ணிட்டு , திரும்ப போட்டியிட்டு அதே தொகுதியில் ஜெயிக்க சொல்லுங்க பார்ப்போம், டெபாசிட் வாங்க சொல்லுங்க பார்ப்போம்.

 

Categories

Tech |