Categories
அரசியல் திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருப்பூரில் அசத்திய பாஜக…! பள்ளிக்கு ரூ 1 லட்சம் பிளான்…. ஓடோடி வந்த தமிழக அரசு… நன்றி சொன்ன அண்ணாமலை!!

தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசும் போது,  அன்பார்ந்த பெரியோர்களை, தாய்மார்களே பாரதிய ஜனதா கட்சியில தமிழகத்தில் 1,260 மண்டல் இருக்கு, ஒன்றியம். அந்த 1,260 ஒன்றியத்தில் இது ஒரு ஒன்றியத்துடைய நிகழ்ச்சி. இந்த அளவுக்கு நம்முடைய கட்சி வளர்ந்து இருக்கு என்பதற்கு இது ஒரு சான்று. இது ஒரு மாவட்ட நிகழ்ச்சி இல்ல, இது திருப்பூர் வடக்கு மாவட்டத்தில் இருக்கக்கூடிய வீரபாண்டிய ஒன்றியத்தின் உடைய நிகழ்ச்சி.

அதுவும் மிக முக்கியமான இரண்டு விஷயங்களை செய்வதற்காக நம்மளை இங்கு அழைத்திருக்கிறார்.  மது, குடி..  அதனால் இறந்த 45 மனிதர்கள்.  சகோதரர்கள். அவருடைய குடும்பத்தில் அவுங்களுடைய மனைவியை கண்டுபிடித்து,  இந்தப் பகுதியில யாரெல்லாம் இருக்கிறார்களோ…  அவர்களுக்கு மேடையில்   ஒரு நிதி உதவி நமது கட்சியின் மூலமாக கொடுக்கிறோம்.

ஒரு பக்கம் கட்சி குடி,  குடி என்று சொல்லிட்டு,  டாஸ்மாக்கை ஓபன் செய்து கொண்டிருக்கும் பொழுது..  தெருத்தெருவாக எல்லாம் திறக்கும் பொழுது,  இன்னொரு பக்கம் பாரதிய ஜனநாயக கட்சி, இது தமிழகம் முழுவதுமே முன்னெடுக்க போகின்றோம்.. தமிழக முழுவதுமே இந்த குடியால் உயிரிழந்த மனிதர்களுடைய குடும்பத்தில்…   ரொம்ப கஷ்டத்துல இருக்காங்க என்றால், அவர்களை கண்டுபிடித்து,  நிதி உதவி செய்வதற்காக இருக்கக்கூடிய கூட்டம்.

இரண்டாவது… நம்முடைய அண்ணன் சொன்னது போல,  மூன்று அரசு பள்ளிகளுக்கு..  அந்த குழந்தைகளுக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் விதம் 3 பள்ளியில் தேவையான பெஞ்ச்,  அவர்களுடைய போர்ட் கூட உடைந்து இருக்கிறது.  நமக்கெல்லாம் போர்டு என்கிறது ரொம்ப முக்கியம். அந்த போர்டு கூட சரியா இல்ல. அதையெல்லாம் வாங்கி கொடுப்பதற்காக ஒரு முயற்சி எடுத்திருக்கிறார்கள்.

அதை அரசு இரண்டு நாட்களுக்கு முன்பு 30 ஆண்டுகள் கழித்து நாங்களே செய்றோம் என செஞ்சிருக்காங்க,  சந்தோஷம். அரசு செஞ்சா சந்தோசம் தான். அட்லீஸ்ட் இப்பவாச்சு செய்றாங்களே…  இருந்தாலும் அந்த பள்ளிக்கு இதை வேறுவிதத்தில் அவர்கள் பயன்படுத்தலாம். இந்த ஒரு லட்ச ரூபாய் ஒரு பள்ளி,  3 பள்ளியும் வேறுவேறு விதத்தில் பயன்படுத்தலாம்.

இந்த இரண்டுமே மண்டல அளவுல இங்கே இருக்கக்கூடிய தலைவர்கள்,  தொண்டர்கள் இணைந்து இதை முன்னெடுத்து இருக்கிறார்கள். ஒரு அரசியல் நிகழ்ச்சி அல்ல, முழுவதுமாக மக்களுக்கு பயன்படக்கூடிய நல்ல ஒரு நிகழ்ச்சியாக இது அமைந்திருக்கிறது. அதனால் இந்த வீரபாண்டிய மண்டலுடைய   தலைவர் திரு மகேஷ் குமார் அவர்கள்,  அண்ணன் வெள்ளியங்கிரி அவர்களுக்கு,  அஸ்வின் அவர்களுக்கு முதல்ல என்னுடைய சார்பாக பாராட்டுக்களும்,  நன்றிகளும் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

Categories

Tech |