செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கூட்டணியில் தொடர்ந்து கொண்டிருக்கின்றோம். ஆரோக்கியமான முறையில் போயிட்டு இருக்கு. அதே நேரத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக நானும் தெளிவாக இருக்கிறேன். ஒரு விஷயத்துல… கட்சியினுடைய வளர்ச்சி என்பது மிக சிறப்பாக, தெளிவாக, அடுத்த கட்டத்திற்கு நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இன்னும் 16 மாசம் இருக்கு.
சின்ன சின்ன விஷயம். கூட்டணி எப்படி அமையும் ? கூட்டணி தன்மை எப்படி ? என்பதையெல்லாம் வருகின்ற காலத்தில் பார்ப்போம். இன்றைக்கே அனைத்தையும் முடிவு செய்ய முடியாது அப்படிங்கறது என்னுடைய கருத்து. கூட்டணி தன்மையை பற்றி எப்ப முடிவு செய்வீங்க ? காங்கிரஸ் கிட்ட போய் இதே கேள்வியை கேக்குறீங்க…. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எத்தனை சீட் நிப்பீங்க ? என்றால் தெரியாது என சொல்லுவாங்க. ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
கூட்டணி என்பது கொள்கைகள் ஒத்துப் போகின்ற காரணத்தினால் கூட்டணி இருக்கும் கூட்டணியின் உடைய தன்மை எப்படி ? அதைப் பற்றி தெரியாது. பாஜக ஒரு தனி கட்சி. இந்தக் கட்சிக்கு சில கோட்பாடுகள் இருக்கு. என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை பாரதிய ஜனதா கட்சியினுடைய தேசிய தலைவரிடம் நான் சொல்ல போறேன். அவர்களெல்லாம் சேர்ந்து முடிவு எடுப்பாங்க. அதுக்குன்னு வந்து இன்னைக்கே நீங்க எல்லாத்தையும் முடிவு பண்ண கூடாதுன்னு நான் சொல்றேன். இன்னைக்கே கூட்டணி அமைஞ்சிருச்சு. இவ்வளவு சீட் நிக்க போறாங்க என சொல்வது அபத்தமானது. இன்னும் 16 மாதம் இருக்கு. பேசுவதற்கான நேரம் இருக்கு. அந்த நேரத்தில நாம பேசுவோம்.
நான் எப்பொழுதுமே பாட்டாளி மக்கள் கட்சி செய்தி தொடர்பாளர் என சொல்லி கொள்ளவில்லை. நான் வந்து பாரதிய ஜனதா கட்சியினுடைய மாநில தலைவர். நான் பாமக செய்தி தொடர்பாளன் இல்லை. நீங்க கண்டிப்பா பாமக கிட்ட இந்த கேள்வி கேட்கணும். நான் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக NDA எப்படி இருக்கு ? பார்லிமென்ட்டரி போர்ட் என்ன ? இது எப்படி அமையும் ? கூட்டணி தன்மை என்பது என்ன ? என அதை பற்றி நான் பேசிக் கொண்டிருக்கிறேன் என தெரிவித்தார்.