Categories
அரசியல் மாநில செய்திகள்

“தங்கத்தை இயக்கும் பாஜக” நமது எம்ஜிஆர் நாளிதழ் விமர்சனம்…!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் தங்க தமிழ்செல்வனுக்கும் , TTV தினகரனுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக அ.ம.மு.க_வில் TTV தினகரன் மற்றும் தங்கத்தமிழ் செல்வனிடையே ஏற்பட்ட மோதல் தமிழக அரசியலை பரபரப்பாக்கி வருகின்றது. இதில் TTV தினகரனை  அ.ம.மு.க_வில் இருந்து நீக்கியாக TTV_யும் , அ.ம.மு.க.வில் இருந்து என்னை நீக்கவில்லை அப்படி நீக்கினாலும் கவலையில்லை என்று தங்கத்தமிழ்ச்செல்வமும் தெரிவித்துள்ளனர்.மேலும் அ.தி.மு.க.வில் இணைய சொல்லி என்னை யாரும் தொடர்புகொள்ளவில்லை ,  தி.மு.க. உள்பட எந்த கட்சியிலும் இணைவதற்கான வாய்ப்பு தற்போதைக்கு இல்லை என்றும் தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.

இந்நிலையில் அமமுகவின் நமது எம்ஜிஆர் நாளிதழ் தங்க தமிழ்ச்செல்வனை விமர்சித்து தலையகம் எழுதியுள்ளது.  நான் யார் ? நீ யார்?   என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அந்த கட்டுரையில் , தங்க தமிழ்ச்செல்வனை பாஜக தான் பின்னால் இருந்து இயக்குகிறது. தங்க தமிழ்ச்செல்வனை வைத்து ஓ.பன்னீர்செல்வத்தை  முடக்க பாஜகவும், எடப்பாடி பழனிசாமியும்  திட்டமிட்டு வருவதாகவும் , அதற்கான அமித்ஷா வியூகம் வகுத்துள்ளார் என்றும் அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |