தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது, ஜமேசா முபின் அக்டோபர் 21ஆம் தேதி காலையில் அவருடைய whatsapp மெசேஜ் இன் ஸ்டேட்டஸ். அவர் மாற்றி இந்த ஸ்டேட்டஸை வைத்தார். அதன் பின்பு சிசிடிவி காட்சிகள் சில தனியார் தொலைக்காட்சியில் நிறுவனங்கள் வெளியிட்டீர்கள். அதில் ஜமேசா முபின் வீட்டிலிருந்து இரண்டு சிலிண்டர்கள் வெளியே வருகிறது. 4 இந்த நபர்கள் வந்து அதை தூக்கிட்டு வருவதை எல்லாம் செய்திகளாக போட்டீர்கள். அதன் பின்பு காவல்துறைக்கு மிக உச்சகட்டமான அழுத்தத்தை, பாரதிய ஜனதா கட்சி, சில மீடியா நண்பர்கள் கொடுத்த பிறகு, கோயம்புத்தூர் மாநகர காவல் துறை 5 பேர் கைது செய்து என்று பெயர் கொடுத்துள்ளார்கள்.
முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் என்கின்ற ஐந்து பேரை கொடுத்து இருக்காங்க. தமிழ்நாட்டிலேயே இதுவரை பார்க்காத ஒரு விசித்திரமான பத்திரிக்கை அறிக்கையை கோயமுத்தூர் காவல்துறை கொடுத்திருக்கிறது. ஏன் கைது பண்ணி இருக்கிறோம் ? இல்லை. எந்த செக்ஷன்ல கைது பண்ணியிருக்கிறோம் ? இல்லை. எதற்காக கைது செய்து இருக்கிறோம் ? இல்லை. அதாவது சிலிண்டர் விபத்தில் ஐந்து பேரை கைது செய்திருக்கிறோம் என்று சொல்லி உள்ளார்கள்.
பாரதிய ஜனதா கட்சியில் யாராவது ஒரு சகோதரர் பேஸ்புக் ல ஒரு போஸ்ட் போட்டா, அவரை கைது பண்ணி.. அதற்கு ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி, அதற்கு ஐந்து பக்க பத்திரிகை அறிக்கை கொடுத்து, அது என்னென்ன செக்ஷன் போட்டாரு ? எப்படி போட்டாரு ? எந்த போன்ல இருந்து போட்டாரு ? எவ்வளவு வேகத்தில் டைப் அடிச்சாருன்னு ? சொல்லக்கூடிய காவல்துறை, ஒரு தற்கொலை படை தாக்குதல்ல ஐந்து நபர்களை கைது செய்துவிட்டு, எந்த செக்ஷன் போட்டோம் என்று கூட சொல்லவில்லை. இதையும் தாண்டி இன்னும் ஒரு பகுதி முன்னாடி சொல்றேன் என தெரிவித்தார்.