செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், கள்ளக்குறிச்சியில் ஊடகவியலாளர்கள் மீது நடந்திருக்கின்ற இந்த தாக்குதல், குறிப்பாக நக்கீரன் முதன்மை செய்தியாளர், மூத்த ஊடகவியலாளர் பிரகாஷ் மீது, அவர் வந்து வாகனத்தின் மீது, மோசமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதேபோல கேமராமேன் தாக்கப்பட்டு,
அவருடைய பல் உடைந்து இருக்கிறது. இந்த நடவடிக்கைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தூண்டியவர் உட்பட அனைவரும் கைது செய்யப்பட வேண்டும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊடகவியலாளர் சுதந்திரத்தை பறிப்பது மட்டுமல்ல. இது மிக மோசமான ஒரு முன்மாதிரியான அமைந்து விடக்கூடாது.
ஊடகவியலாளர்கள் எது குறித்தும் எழுத முடியாது, பேச முடியாது என்கின்ற ஒரு அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய அநாகரிகமான போக்கு, தமிழக அரசு இதை கடுமையாக நடவடிக்கை எடுக்கும் என்று நான் நம்புகிறேன், உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என தெரிவித்தார். நீட் தேர்வில் SC/ST மாணவர்களுக்கு கோட்டா இருப்பதால் பாதிக்கப்படமாட்டார்கள் என்ற மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பேசியது குறித்து கருத்து தெரிவித்த திருமாவளவன்,
பாரதிய ஜனதா கட்சியில் ஒரு அமைச்சராக இருக்கின்ற நிலையில் அதற்காக ஆதரவாக தான் அவர்கள் பேசியாக வேண்டும், ஆகவே அவருடைய கருத்தை நாம் தலித் தலைவரின் கருத்து என்று எடுத்துக் கொள்ள முடியாது, பிஜேபி மந்திரியின் கருத்து என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நீட் எந்த அளவிற்கு மாணவர்களை பாதிக்கும் என்பதை தமிழகத்தில் இருந்து பார்க்க வேண்டும், பெரியார், அம்பேத்கர் பார்வையில் இருந்து பார்க்க வேண்டும். இல்லை என்றால் நீட் எதிர்ப்பு என்பது ஏற்படாது, அதற்கு வாய்ப்பு இல்லை, வட இந்திய மாநிலங்கள் இப்படித்தான் அதை அணுகுவதாக நான் பார்க்கிறேன் என தெரிவித்தார்.