மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கலையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் தேசிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 231 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட மத்திய பிரதேச பேரவையில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களை பெற்று , கூட்டணி கட்சிகளை இணைத்து ஆட்சி செய்து வருகிறது. எதிர்க்கட்சியான பாஜக 107 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ளது. முதலமைச்சராக கமல்நாத் இருந்துவருகிறார்.
ஆட்சி அமைந்து ஒரு ஆண்டுகள் ஆன நிலையில் பரபரப்பு மத்திய பிரதேச அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தங்கள் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்கள்ளையும் , சுயச்சை எம்எல்ஏக்கள் 4 பேரையும் பாஜக கடத்தி விட்டதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் ஜிது பட்வாரி குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிராஸ் கட்சியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பாஜக எம்.எல்.ஏ. நரோட்டம் மிஸ்ரா கமல்நாத் அரசுக்கு பெரும்பான்மை கிடையாது. இதனால் இந்த அரசு நிலைக்காது. பாஜகவின் உறுப்பினர்களுக்கு காங்கிரஸ் கட்சி அழுத்தம் கொடுக்கின்றது. எங்கள் மீது உள்ள குற்றசாட்டை நிரூபிக்க முடியுமா என்று தெரிவித்தார். முதல்வர் கமல்நாத் மகன் பதிலளிக்கையில் ஆட்சிக்கு எந்த பிரச்சனையும் வராது , மயமான உறுப்பினர்கள் விரைவில் திரும்புவார்கள் என்று தெரிவித்தார்.