கேரளாவில் விஷூ பண்டிகை முன்னிட்டு நடிகரும் பாஜக எம்பிமான சுரேஷ் கோபி தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியகியுள்ளது.
தமிழகத்தில் சித்திரை திருநாள் கொண்டாடுவது போல அண்டை நாடான கேரள மாநிலத்திலும் விஷூ பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்ட்கையன்று வீட்டிலுள்ள பெரியவர்கள் தாத்தா அல்லது தந்தை குழந்தைகளுக்கு கை நீட்டம் வழங்குவார்கள்.
இந்த நிலையில் விஷூ பண்டிகையை முன்னிட்டு பாஜக எம்பியும் பிரபல மலையாள நடிகருமான சுரேஷ் கோபி பொதுமக்களுக்கு கை நீட்டம் என்ற பெயரில் பணம் கொடுக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. இந்த வீடியோவில் காரின் உள்ளே அமர்ந்து கொண்டு சுரேஷ் கோபி பொதுமக்களுக்கு பணம் கொடுக்கிறார். அவரிடம் வரிசையில் நின்று பெண்கள் உட்பட பொதுமக்கள் அவரின் காலை தொட்டு வணங்குகின்றனர். அப்போது புகைப்படம் எடுக்கப்பட்டு அதற்கு அவர் போஷும் கொடுத்திருக்கிறார். இதற்கிடையில் கேரள மாநிலம் திருச்சூரில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நடிகர் சுரேஷ் கோபி தலைமையில் பாஜக பிரிவு ஏற்பாடு செய்திருந்த விஷு நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் இந்த வீடியோ வெளியாகி விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஏற்கனவே கொச்சி தேவசம் போர்ட் விஷு தினத்தன்று அர்ச்சனை செய்வதற்காக கைநீட்டம் வழங்குவதற்காக மக்களிடமிருந்து கோயில் பூசாரிகள் பணம் பெறுவதைதடை செய்திருந்தது. இருப்பினும் திருச்சூர் வடக்குநாதன் கோயில் பூசாரியிடம் நடிகர் சுரேஷ் கோபி ரூபாய் 1000 கொடுத்தற்காக அவரின் பெயரை குறிப்பிடாமல் தேவசம் போர்டு உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.