மத்திய பிரதேசத்தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற பாஜக எம்.பி. ஜனார்தன் மிஸ்ரா தன்னிடம் மக்கள் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் ஊழல் செய்வதாக தொடர்ந்து புகார் அளித்து வருகிறார்கள் என்று கூறியுள்ளார். அவர்களிடம் நான் “ரூ.15 லட்சம் வரை
ஊழல் செய்திருந்தால் என்னிடம் வந்து புகார் அளிக்காதீர்கள். ரூ.15 லட்சத்திற்கு மேல் ஊழல் செய்திருந்தால் மட்டுமே என்னிடம் வாருங்கள்” என்று விளையாட்டாக கூறியிருக்கிறேன்.
அதற்கு காரணம் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிட வேண்டுமானால் ரூ.7 லட்சம் வரை தேவைப்படும். அதனை தொடர்ந்து அடுத்த தேர்தலிலும் போட்டியிடுவதற்கு இன்னும் ஒரு 7 லட்சம் தேவைப்படும். அதேபோல் பணவீக்கம் நாட்டில் அதிகரித்து கொண்டே வருவதால் கூடுதலாக 1 லட்சமும் கூட தேவைப்படலாம். ஆகவே உங்களிடம் ரூ.15 லட்சத்துக்கும் மேல் பஞ்சாயத்துத் தலைவர்கள் ஊழல் செய்திருந்தால் மட்டுமே புகார் தெரிவியுங்கள் என்று கூறியுள்ளார்.
…When people accuse sarpanch of corruption, I jokingly tell them that if corruption is up to Rs 15 lakhs don't come to me…come only if it's (corruption) beyond Rs 15 lakhs: BJP MP Janaradan Mishra in Rewa, Madhya Pradesh (27.12) pic.twitter.com/ImobGWecBH
— ANI (@ANI) December 28, 2021
இவ்வாறு அவர் பேசி வீடியோவானது சமூகவலைதளத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் ஒரு எம்.பி.யே இவ்வாறு பஞ்சாயத்து தலைவர்கள் ஊழல் செய்வதை நியாயப்படுத்தி விளையாட்டாக பேசியிருப்பது பெரும் வேதனைக்குரியது. எனவே ஊழலை ஆதரித்துப் பேசியதற்காக பாஜக எம்பி ஜனார்தன் மிஸ்ரா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டன குரல்கள் எழும்பி வருகின்றன.