தெலுங்குதேச கட்சியினர் பாஜகவில் இணைந்ததையடுத்து கவலைப்பட எதும் இல்லை , வரலாறு மீண்டு வருமென்று சந்திரபாபு நாயுடு ட்வீட் செய்துள்ளார்.
ஆந்திராவில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற சந்திரபாபு நாயுடு_வின் தெலுங்குதேச கட்சி படுதோல்வி அடைந்தது. மேலும் தந்து தலைமையில் நடந்து வந்த ஆட்சியையும் ஜெகன்மோகன் ரெட்டியிடம் பறிகொடுத்தார் சந்திரபாபு நாயுடு . இந்த மோசமான தோல்வியையடுத்து தெலுங்குதேசம் கட்சியில் தொடர் சலசலப்பு ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்றது. தெலுங்குதேசம் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை MP 4 பேர் பாஜகவின் செயல் தலைவர் நட்டாவை நேரில் சந்தித்து அக்கட்சியில் இணைந்துள்ளனர்.
மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் தோல்வியால் நொந்து போய் இருக்கும் சந்திரபாபு நாயுடு_க்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில் , ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததால் பாஜகவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பல கோடி ஆந்திர மக்களுக்கும் துரோகம் செய்த பாஜகவுடன் நட்பு பாராட்டுவதை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன்.
இப்படி பிரச்சினைகள் எனக்கோ, கட்சிக்கோ புதியது அல்ல. தெலுங்குதேசம் கட்சி செத்து போய்விட்டது , தெலுங்குதேசத்தின் அத்தியாயம் முடிந்து விட்டது, அக்கட்சித் தலைவர் ஓடிவிட்டார்கள் , கட்சி புதைகுழிக்கு போய்விட்டது என்றெல்லாம் சொன்னார்கள். கவலைப்பட எதுமே இல்லை , வரலாறு மீண்டும் வரும் .லட்சக்கணக்கான தொண்டர்கள், கோடிக்கணக்கான தெலுங்கு மக்கள் எங்களுக்குப் பின்னால் இருக்கின்றனர் என்று சந்திரபாபு நாயுடு பதிவிட்டுள்ளார்.