வைகோவை பாஜக இயக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அழகிரிக்கும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. ஒரே கூட்டணிக்குள் ஏற்பட்ட கருத்து மோதல் குறித்து பலரும் விமர்சனம் செய்து வரும் நிலையில், இதுகுறித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசுகையில்,
பாஜக நேர்மறை அரசியலிலை தான் எப்பொழுதும் விரும்பும் என்று தெரிவித்த அவர், தமிழகத்தைப் பொருத்தவரையில் அண்ணா வைகோவும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அழகிரியும் சண்டை போட ஆரம்பித்திருக்கிறார்கள். ஏற்கனவே நாம் வைகோவிடம் இதே கேள்வியை கேட்டோம். அதில், காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறீர்களே, சில ஆண்டுகளுக்கு முன்னால் இலங்கையில் தமிழர்கள் கொல்லப் படுவதற்கு காரணம் காங்கிரசும், திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியும் தான் என்று சொல்லிக்கொண்டிருந்த நீங்கள்,
தேர்வு செய்யப்படும் வரை எதுவுமே பேசாமல் தேர்வு செய்யப்பட்ட பின் இன்று காங்கிரசை குறை கூறுகிறீர்கள் ஏன் என்று கேட்டதாக தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர், வைகோ அவர்கள் அவரது கருத்திற்கு பொருந்தாதவர்களுடன் கூட்டணி அமைத்ததால் தான் தற்பொழுது சண்டையிட்டு கொண்டு இருப்பதாக தெரிவித்தார். ஆனால் இதில் பாரதிய ஜனதா கட்சிதான் வைகோவை பின்னாலிருந்து இயக்குகிறது என்று குறை சொல்லி கொண்டு இருக்கிறார்கள். அதனை ஒரு போதும் ஏற்க இயலாது என்று தெரிவித்தார்.