Categories
தேசிய செய்திகள்

பாஜக அலுவலகம் அருகே 51 நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு… மேற்கு வங்கத்தில் போலீஸ் அதிரடி…!!

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக அலுவலகம் அருகே 51 நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

மேற்குவங்கத்தில் தேர்தலுக்கு முன்பும், அதற்கு பிறகும் வன்முறைகள் தொடர்ந்து நடைபெற்று வந்த வண்ணம் உள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இதையடுத்து பாஜக தொண்டர்கள், அவர்களது குடும்பத்தினர், வீடுகளில் அதிகளவில் தாக்குதல் நடைபெற்று வருகிறது.

அம்மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் பாஜக கட்சி அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்கு அருகே நாட்டு வெடிகுண்டுகள் வைக்கப்பட்டதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 51 நாட்டு வெடிகுண்டுகளை காவல் துறையினர் கைப்பற்றினர். இந்த வெடிகுண்டுகளை யார் கொண்டு வந்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Categories

Tech |