கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, வருகிற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சி வெற்றி பற்றி 25 எம்பிக்களுடன் நாடாளுமன்றம் செல்வோம் என்றும் கூறியுள்ளார். பொங்கல் பரிசில் திமுக அரசு கரும்பு தருவதற்கு கூட தயாராக இல்லை. திமுக அரசு மீது மக்களுக்கு வெறுப்பு வந்துவிட்டது. எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் வெற்றி என்பது மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் நிச்சயமாக நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் 25 எம்பிக்கள் வெற்றி பெறுவது உறுதி என்றும் கூறினார்.
இந்நிலையில் அண்ணாமலை பாஜக கட்சியை சேர்ந்தவர்களுக்கு தற்போது ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளார். அதாவது வருகிற தேர்தலில் பிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சியில் அமரப் போகிறார். அதோடு தமிழகத்திலிருந்தும் 25 பாஜக எம்பிகள் நாடாளுமன்றம் செல்வார்கள். எனவே தற்போது இருந்து அடுத்த 16 மாதத்திற்கு நாம் செய்ய வேண்டிய ஒரே வேலை பூத் வேலை மட்டும்தான். மேலும் பிரதமருக்காக வீடு வீடாக சென்று பாஜகவுக்கு வாக்களிக்குமாறு கேட்குமாரும் அண்ணாமலை கூறியுள்ளார்.