திருப்பூரில் இன்று பாஜகவினர் பேரணி நடத்த உள்ளதை முன்னிட்டு பிரியாணிக்கு பாதுகாப்பு வழங்க கோரி பிரியாணி சங்கத்தினர் காவல்நிலையத்தில் மனு அளித்துள்ளனர்.
திருப்பூரில் இன்று குடியுரிமை சட்ட மசோதாவிற்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் மிகப்பெரிய பேரணி நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். அதற்கான அனுமதியும் காவல்நிலையத்தில் வாங்கிவிட்டனர்.
இந்நிலையில் பெரிய கடை வீதி வழியாக அவர்கள் செல்லும் பொழுது ஏராளமான பிரியாணி கடைகள் இருப்பதால் பிரியாணி சங்கத்தினர் பாஜக உறுப்பினர்களிடமிருந்து பிரியாணியையும், பிரியாணி அண்டாவையும் பாதுகாக்கவேண்டும் என்று காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளனர். இந்த மனு அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.