Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவை ஓடஓட விரட்டி அடிக்கணும்: திருமா பரபரப்பு பேச்சு …!!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எல்லாவற்றையும் விட,  ஒரு கூட்டணியை இவ்வளவு கட்டுக்கோப்பாக தமிழகத்தை தவற…  வேறு எவராலும்,  எந்த தலைமையாலும் நடத்த முடியாது. எண்ணி பாருங்கள்….  கலைஞர் காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு பெரிய சரிவை சந்தித்தது.

விஜயகாந்த்  எதிர்க்கட்சி தலைவராக  வந்த சூழலில் திராவிட முன்னேற்றக் கழகம் மூன்றாவது இடத்தை நோக்கி நகர்ந்த நிலையில், அதை இன்று முதலிடத்திற்கு கொண்டு வந்தவர் தளபதி அவர்கள்…  கலைஞர் காலத்திலேயே இரண்டாவது இடத்திற்கு கொண்டு வந்தார். இன்று முதலிடத்திலே ஆட்சி அதிகார பீடத்தில் அமர வைத்திருக்கிறார் என்றால்,  இந்த கட்சியை எவ்வளவு கட்டுக்கோப்பாக ?  தலைமை தாங்கி,  வழிநடத்திக் கொண்டு இருக்கின்றார் என்பதை உணர்த்த இதைவிட வேற என்ன சான்று வேண்டும் ?

ஆட்சியை காப்பாற்றுவதை விட…  கட்சியை காப்பாற்றுவது முக்கியம்..  ஆட்சியில் இருப்பதைவிட, திமுக போன்ற ஒரு சுயமரியாதை இயக்கம் இந்த  மண்ணுக்கு தேவை. பெரியார் வழியில் தோன்றிய ஒரு இயக்கம் வேண்டும்.  சமூக நீதியை பாதுகாக்க வேண்டுமானால்…  சனாதன சக்திகளை விரட்டி அடிக்க வேண்டும் என்றால்…  இந்த மண்ணை,,  தமிழ் மண்ணை,  நாம் பாதுகாப்பதற்கு திராவிட முன்னேற்ற கழகம் என்கிற ஓர் பேர் அரண்…  தவிர்க்க முடியாத தேவை என்பதை ஜனநாயக சக்திகள் உணருகிறோம்.

திராவிட இயக்க அமைப்புகளும்,  இடதுசாரிகளும்,  பெரியார்  சிந்தனையாளர்களும்…  ஒன்று சேர்ந்து, இந்த சனாதன சக்திகளை விரட்டி அடிக்க வேண்டிய பெரும் பொறுப்பு நம் முன்னால் இருக்கிறது. நான் ஒவ்வொரு மேடையிலும் சொல்லுகிறேன்…  தமிழ்நாட்டை மட்டுமல்ல,  அகில இந்தியாவையே காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அண்ணன் தளபதி அவர்களுக்கு இருக்கிறது. இந்திய அளவில் அவர் பயணம் செய்ய வேண்டும்.  ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க வேண்டும். 2024-ஆம் ஆண்டு நடைபெற இருக்கிற பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா உள்ளிட்ட சங்பரிவார்களை ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும்.

ஆட்சி அதிகார பீடத்தில் இருந்து தூக்கி எறிய வேண்டும். தமிழ்நாட்டையும்,  தமிழ்நாட்டு மக்களையும்,  பாதுகாக்கிற பொறுப்போடு இந்தியாவையும்,  அரசியலமைப்புச் சட்டத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு… அண்ணனின் தோள்களில் இருக்கிறது. உங்களை கலைஞர் மட்டும் அடையாளம் காட்டவில்லை, கலைஞரின்  உற்ற தோழர் இனமான பேராசிரியர் அவர்களும் அடையாளம் காட்டியிருக்கிறார். உங்களை  அவர்களை உணர்ந்து இருக்கிறாராகள்,  புரிந்திருக்கிறார்கள். அதனால் அடையாளம் காட்டி இருக்கிறார்கள். அந்த அடிப்படையில் உங்களை நாங்கள் எங்கள் கூட்டணியின் தலைவராக ஏற்றுக் கொண்டு,  உங்களோடு கைகோர்த்து இந்த களத்தில் நிற்பதற்கு எப்போதும் உற்ற துணையாக இருப்பதற்கு தயாராக இருக்கிறோம் என தெரிவித்தார்.

Categories

Tech |