பா.ஜ.க.வின் ஆதரவின்றி தமிழகத்தில் எது நடந்தாலும் நல்லதுதான் என்று டி.கே.ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்த் தனக்கு காவி சாயம் பூச முயற்சிக்கிறார்கள் என்றும் , அதில் நானும் , திருவள்ளுவரும் சிக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார். ரஜினியின் இந்த பேச்சு தமிழக பாஜக அரசியலில் ரஜினி பாஜக ஆதரவு என்று தவறாக சித்தரிக்கப்பட்ட கருத்தை சுகுசுக்காக உடைத்தெறிந்தது.நடிகர் ரஜினியின் கருத்துக்கு தமிழக அரசியல் தலைவர் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் TK.ரங்கராஜன் கூறுகையில் ,பாஜகவின் ஆதரவு இல்லாமல் தமிழகத்தில் எது நடந்தாலும் அது நல்லதுதான். பாரதிய ஜனதா மற்றும் ஆர்எஸ்எஸ் ஆதரவு இருக்கிறது என்றால் தமிழ் சமுதாயத்திற்கு தீங்கு விளைகின்றது என்று அர்த்தம். அப்படிப்பட்ட தீங்கு விளைவிக்காமல் இருப்பேன் என்று ரஜினி சொல்கிறார் எனவே அது ரொம்ப நல்லது வரவேற்க தகுந்தது என்று தெரிவித்தார்.