Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசுடன் நிற்கும் பாஜக…! C.M ஸ்டாலினுக்கு நன்றி… அண்ணாமலை அதிரடி …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஆன்லைன் ரம்மியால் இதுவரை 30 தற்கொலைகள் நடந்துள்ளது. இதற்க்கு ஆன்லைன் ரம்மி தான் காரணம் என்று காவல்துறையினுடைய பதிவில் பதிவாகி இருக்கிறது. அப்படி இருக்கும் போது முதலமைச்சர் அவர்கள் நான் கருத்து கேட்கின்றேன் என்று தொடர்ந்து என்ன கருத்து கேட்கின்றார்கள் ? என்று நமக்கு தெரியவில்லை. ஆன்லைன் ரம்மி என்பது உடனடியாக தடை செய்யப்பட வேண்டிய ஒரு விஷயம். அது பாரதிய ஜனதா கட்சி மாநில அரசு தடை செய்கின்ற பட்சத்தில் நிச்சயமாக நாங்கள் கூட இருப்போம்.

உடனடியாக கருத்தை கேட்கின்றோம் என்று காலம் தாழ்த்தாமல், அடுத்து 31 வது 32வைத்து ஆன்லைனில் ரம்மி மூலமாக பாதிக்கப்பட்டு தற்கொலை செய்தார்கள் என்றால், அவர்களுடைய ரத்தம் ஆளும் கட்சி உடைய அமைச்சர்கள் மீதும், முதலமைச்சருடைய கைகள் மீதும் மட்டும் தான் இருக்கும், அவர்கள் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இதற்கு மேல் காபி கேட் தற்கொலை மாதிரி நடக்க ஆரம்பித்து விடும், உடனடியாக அதை தடை செய்ய வேண்டியது முதலமைச்சருடைய கடமையாக இருக்கிறது, அதை செய்வார் என்று நம்புகின்றோம்.

ஆவின் ஹெல்த் மிக்ஸ் பண்ணுவோமா?  பண்ண மாட்டோமா ? இல்லையா ? என விவாதித்து இந்த ப்ரோ ஹெல்த் மிக்ஸ் ஸ்கேம்  எல்லாம் போயி இன்று மாநில அரசு கடைசியாக ஆவின் ஹெல்த் மிக்ஸ்சை தயாரிப்பதற்கு முன் வந்திருக்கிறார்கள். இதைத்தான் முதலில் இருந்து சொல்லிக்கொண்டு இருக்கின்றோம். அதனால் மாநில அரசுக்கு சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு நன்றியை கூறி, அந்த டென்டரில் அவர்கள் கஷ்டப்பட்டு மாற்றி இன்னொருவருக்கு கொடுப்பது எல்லாம் விட்டுவிட்டு, உடனடியாக ஆவின் ஹெல்த் மிக்சினுடைய பவுடருக்கு டெண்டர் கொடுக்க வேண்டும் என்று சொல்லுகின்றோம் என தெரிவித்தார்.

Categories

Tech |