விவசாயிகளுக்கு பலனளிக்கும் விதமாக பல்வேறு நலத்திட்டங்களை பாஜக கட்சி வெளியிட்டது பலரால் பேசப்பட்டு வருகிறது.
மக்களவைத் தேர்தல் ஆனதே இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு நாடு முழுவதும் மாபெரும் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனையடுத்து,
பாரதிய ஜனதா கட்சிமக்களவை தேர்தலுக்கான அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. அதில் 50 க்கும் மேற்பட்ட நலத்திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
அவையாவன,
ஏழை விவசாயிகளுக்கு வட்டியில்லாத கிரெடிட் கார்டு வழங்கப்படும்,அனைத்து மாநிலங்களுடன் கூடங்கள் நடத்தி அந்த மாநிலங்களுக்கு ஏற்றவாறு ஜிஸ்டி திட்டம் அனைவருக்கும் பயனளிக்கும் விதமாக மேலும் எலிமையாக்கப்படும்
2022-ஆம் ஆண்டுக்கு முன்பாக இந்தியாவில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் வீடு வழங்கப்படும்
60 வயதிருக்கும் மேற்பட்ட ஏழை எளிய விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்
கிராமப்புறங்களை வளர்ச்சி அடைய செய்ய 25 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் ,
மேலும் அனைத்து விவசாயிகளுக்கும் ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூ.6000 உதவித்தொகை வழங்கப்படும்
5 ஆண்டு காலம் வரை விவசாயிகளுக்கு ரூ 1 லட்சம் வரையிலும் வட்டியிலா கடன் வழங்கப்படும்
மத நம்பிக்கைகளை பாதுகாத்திட அரசியல் மற்றும் சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்
நாடு முழுவதும் புதியதாக 75 மருத்துவக் கல்லூரிகள் கட்டப்படும்
நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் பெண்களுக்குரிய 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்
இந்தியாவின் தர்ப்போதைய சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு புதியதாக பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்
நதிகள் இணைப்பிற்கு தனி அரசாணை அமைக்கப்படும்
சட்ட விதிகளுக்கு உட்பட்டு அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இவ்வாறு பல்வேறு விதமான நலத்திட்டங்களைகொண்ட அறிக்கையை பாஜக கட்சி வெளியிட்டுள்ளது தற்பொழுது பலரால் பேசப்பட்டு வருகிறது