பொதுக்கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பாரதிய ஜனதா என்கின்ற ஆர்.எஸ்.எஸ்-இன் அரசியல் அணி, தமிழ் மண்ணை குறி வைத்து காலொன்றுவதற்கு துடித்துக் கொண்டிருக்கின்ற வேலையில், அவர்கள் பரப்புகின்ற அவதூறுகளுக்கு , அவதூறுகளை பொருட்படுத்தாமல் எப்படி எல்லாம் கூச்சல் போடுகிறார்கள்,
கூப்பாடு போடுகிறார்கள். 2024 ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தார் மோடி இதை அறிவிப்பார், அதை அறிவிப்பார் முஸ்லிம்களுக்கு எதிரான கூர்மையான ஆயுதங்களை தீட்டி வையுங்கள் என்று ஒரு பாடகன் மேடையில் பேசுகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்னால் உத்தரப்பிரதேசத்தில் ஒரு சாமியார் கும்பல் ஒன்று கூடி,
30 பேர் கொண்ட குழுவோடு அரசமைப்பு சட்டத்தை எழுதி விட்டதாகவும், அதுதான் 2024லே இந்தியாவின் அரசியலமைப்பு சட்டமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கிறார்கள். திமுக வலிமையாக இருக்கிறவரையில்தான் சனாதன கும்பலுக்கு அச்சம் இருக்கும், அவர்களுக்கு ஒரு பயம் இருக்கும். அவர்களின் இலக்கே திமுகவை அழிப்பது தான், அதிமுகவை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விழுங்கி விட முடியும் அவர்களால்.. அதிமுகவை விழுங்கி செறிப்பது அவர்களுக்கு எளிமையான ஓன்று என தெரிவித்தார்.