Categories
அரசியல் மாநில செய்திகள்

கைகோத்த அதிமுக, பாஜக ….! ”ஒரே நாளில் ஹாட்ரிக்” மிரளும் ஸ்டாலின், மிரட்டிய வழக்கு …!!

திமுகவின் முக்கிய தலைவர்கள் மீது அடுத்தடுத்து தொடரப்பட்ட வழக்குகளால் நேற்று தமிழகம் பரபரப்பான களமாக இருந்தது.

கடந்த 18ஆம் தேதி பாஜகவின் புதிய மாநிலத் தலைவரான முருகனை திமுகவின் வி.பி துரைசாமி சந்தித்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பு குறித்து பல யூகங்கள் கிளப்பி விடப்பட்டன. அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வி.பி துரைசாமி இந்த சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமானது. மு. க ஸ்டாலின் அருகில் உள்ளவர்கள் அவரிடம் தவறாக சொல்கிறார்கள். கட்சிக்குள் ஜாதி இல்லை  சொல்கிறார்கள், ஆனால் ஜாதியை பார்த்து தான் பொறுப்பு வழங்குகிறார்கள் என்று ஏராளமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

திமுகவில் சாதி:

இதனையடுத்து அவரின் துணை பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கி மு.க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். துணைப் பொதுச் செயலாளராக எம்.பி அந்தியூர் செல்வராஜ் நியமிக்கப்பட்டார். இதனை பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட வி.பி துரைசாமி நேற்று முன்தினம் பாஜகவில் இணைந்தார். “திமுகவில் சாதிப் பாகுபாடு பார்க்கிறார்கள், திமுகவில் ஜாதிக்கு ஒரு நீதி. அனைத்து தரப்பு மக்களுக்குமான கட்சி பாஜக மட்டுமே” என்றெல்லாம் பேட்டியளித்தார்.

ஆர்.எஸ் பாரதி அதிகாலை கைது:

இந்த நிகழ்வுகளில் பின்னணியில்தான் நேற்று காலை நடைபெற்ற சம்பவங்கள் இருக்கின்றதா ? என திமுகவினர் புலம்பி வருகின்றனர். திமுகவின் அமைப்புச் செயலாளர் எஸ்.ஆர் பாரதி நேற்று காலை கைது செய்யப்பட்டார். அவர் பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து மிகவும் சர்ச்சையாக பேசினார் என்று அவர் மீது  எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில் தேனாம்பேட்டை காவல்துறையினர் கைது செய்தனர். காலை அரங்கேறிய இந்த கைது நடவடிக்கையால் திமுக நடு நடுங்கி நடுங்கி போனது.

சலசலப்புக்கு திமு அஞ்சாது :

இதையடுத்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் கடுமையான கண்டன அறிக்கை வெளியிட்டார். அதில், எடப்பாடி போன்ற டெல்லி எடுபிடிகளின் சலசலப்புக்கு திமுக என்றும் அஞ்சாது. ஊழலையும் தனது நிர்வாக தோல்வியையும் திசை திருப்ப குரோத எண்ணத்துடன் எடப்பாடி பழனிச்சாமி ஆர்.எஸ் பாரதியை அதிகாலையில் கைது செய்கிறார். முதலமைச்சர், அமைச்சர்கள் செய்யும் ஊழலை ஆர் எஸ் பாரதி புகார் கொடுப்பதாக இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இந்த சலசலப்புக்கு திமுக அஞ்சாது என்று கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார் இதனை தொடர்ந்து எழும்பூர் நீதிபதி வீட்டில் நடைபெற்ற விசாரணையில் ஆர்.எஸ் பாரதிக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது.

 

அடுத்தத ஆப்பு:

இந்த நடவடிக்கையால் மிரண்டு போன திமுகழகவுக்கு அடுத்த பேரதிர்ச்சியாக இதே சட்டத்தின் கீழ் எம்பி தயாநிதி மாறன் கைது செய்யப்படுவார் என்று தகவல்கள் பறந்தன. இதையடுத்து தயாநிதி மாறனும், டிஆர் பாலுவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அண்மையில் தலைமைச் செயலாளரை சந்தித்த இருவரும் பேட்டியளித்த போது, எங்களை  தாழ்த்தப்பட்ட மக்களைப் போல் நடத்துகிறார் என்று தயாநிதி மாறன் பேசியதற்கு எதிராக கோயம்புத்தூரில் ஒருவர் போலீசில் புகார் கொடுத்தார். இதனால் இவர்கள் மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பதிவு செய்யப்பட்டதால் இவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று சொல்லப்பட்ட நிலையில் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கை ரத்து செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்தனர்.

சிக்கிய செந்தில் பாலாஜி: 

ஆர் எஸ் பாரதி கைது நடவடிக்கையால் கதி கலங்கி போய் நின்று திமுகவுக்கு இரண்டு எம்.பி.களை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக வெளியான தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹாட்ரிக் ஷாக்காக கரூர்  அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி கலெக்டரை மிரட்டியதாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கு சிபிசிஐடி போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த மூன்று நிகழ்வுகளும் நேற்று திமுகவை கதறவிட்டது.

ஹாட்ரிக் ஷாட்:

திமுக எம்.பி.க்களான டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகியோர் மீது வரும் மே.29 ஆம் தேதி வரை போலீசார் கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதால் திமுக நிம்மதி பெருமூச்சு விட்டது. அதே போல எம்.பி.ஆர் எஸ் பாரதியும் இடைக்கால ஜாமீனில் வந்த நிலையில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி நிலை பரிதாபமாக உள்ளது. இத்தனையும்  சட்ட ரீதியா  எப்படி எதிர்கொள்வது ? என்று மு க ஸ்டாலின் திணறிக் கொண்டு இருக்கின்றார்.

பாஜக ஸ்கெட்ச்:

திமுகவுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி அளித்த இந்த மூன்று நடவடிக்கைகளுக்கும் மூலகாரணம் பாஜகவில் இணைந்த விபி துரைசாமி என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. மேலும் திமுக தலைவர் உட்பட திமுக கூட்டணி கட்சிகளும் கூட பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகின்றன. மொத்தத்தில் திமுகவுக்கு எதிராக அதிமுக, பாஜக ஸ்கெட்ச் போட்டு விட்டது தெளிவாக தெரிகின்றது.

Categories

Tech |