Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிக இடங்களை பிடிக்கும் பாஜக ? எடப்பாடியின் அட்டகாசமான பதில் …!!!

கொரோனா குறித்த விடுமுறை அறிவிப்பு அதே தான் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கரோனா வைரஸ் குறித்து மூத்த அமைச்சர்கள், துறையின் செயலாளர்களிடம் கலந்தாலோசித்து , கொரோனா வைரஸ்ஸை எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்து  அறிக்கை வெளியிட இருக்கிறோம். ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தபோது அவர் குறித்த கருத்துக்களை விவாதிக்கலாம். அதை விட்டுவிட்டு கற்பனையாக ஏதும் பேசக் கூடாது.

தமிழக பாஜகவின் புதிய தலைவர் எல்.முருகன் சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியை விட அதிகமான எண்ணிக்கையில் நாங்கள் இருப்போம் என்று கூறிய கருத்து குறித்து பேசிய முதல்வர்,

எல்லாக் கட்சியையும் வளர்க்க வேண்டும் என்றும் தான் அதன் தலைவர்கள் நினைப்பார்கள் அதன் அடிப்படையில் இப்படி அவர் கருத்து தெரிவித்துள்ளார் என்று பேசினார்.

கமல் மாற்றம் வேண்டும் , அந்த மாற்றம் நாங்கள் தான் என்று தெரிவித்து குறித்த கேள்விக்கு என்னவென்று கடந்த தேர்தலிலேயே பார்த்துவிட்டோம் யார் மாற்றம் என்று என பதிலளித்தார்.

எல்லாரும் அமமுக இணைவதாக TVV.தினகரன் கூறிய கருத்து குறித்த கேள்விக்கு தினகரன் அப்போது இருந்தே அப்படித்தான் சொல்லுறாரு. வருகின்ற தேர்தலுக்கு அப்பறம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இருக்குமா ? னு பாருங்க என்று பதிலளித்தார்.

Categories

Tech |