ஜோ பைடன் முன்னிலை பெற்று வந்த ஜார்ஜியா மாகாணத்தில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உலகமே எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்ற அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இரண்டு நாட்களுக்கு முன்பே வெளியாகியிருக்க வேண்டும். ஆனால் தொடர்ந்து இழுபறி இருந்து கொண்டே இருக்கின்றது. தற்போதைய அதிபர் டொனால்டு தோல்வியை சந்திக்கும் நிலையில் உள்ளார். அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் 264 தேர்தல் சேவை வாக்குகளைப் பெற்று வெற்றி பெறும் தருவாயில் உள்ளார். இன்னும் 6 வாக்குகள் பெற்றால் அவர் புதிய அதிபராக தேர்வு செய்யப்படுவார். ஆனால் இந்த வாக்கு முடிவுகளை அதிபர் டிரம்ப் ஏற்கவில்லை.
தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி, வாக்குப்பதிவில் குளறுபடி, மறு வாக்கு எண்ணிக்கை நடத்துவ வேண்டும் என்ற ஆதாரமற்ற குற்றசாட்டுகளை வைத்ததோடு நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த நிலையில் அதிபர் டிரம்ப் வசமிருந்த ஜார்ஜியா தற்போது ஜோ பைடன் கையில் சென்று கொண்டிருக்கின்றது. டிரம்ப்பை விட ஜோ பைடன் கூட 2000 வாக்குகள் பெற்றுள்ளார்.
ஜார்ஜியா மாநிலத்தில் மட்டும் 16 தேர்தல் சபை வாக்குகள் உள்ளன.இதனிடையே ஜார்ஜியாவில் வாக்கு எண்ணிக்கையை மீண்டும் நடத்த வேண்டும் என்று டிரம்ப் தரப்பு நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. ஆனால் நீதிமன்றம் அதனை நிராகரித்தது. ஆனாலும் ஜார்ஜியா மாநில நிர்வாகம் மறு வாக்கு எண்ணிக்கை நடத்துவத உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் டிரம்ப் தரப்பு சற்று நிம்மதி அடைந்துள்ளது.