Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

துள்ளி வருது வெற்றிவேல்…. முருகனுக்கு அரோகரா…. தடையை மீறிய பாஜக …!!

பாஜக மாநில தலைவர் கையில் வேலுடன் தடையை மீறி வேல் யாத்திரையை தொடங்கி இருக்கின்றார்.

பாஜக சார்பில் இன்று திருத்தணியில் இருந்து திருச்செந்தூர் வரை நடக்கக்கூடிய வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. இருந்த போதும் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது,  உறுதியாக வேல் துள்ளி வரும் என பாஜக மாநில தலைவர் ஒற்றை வார்த்தையில் பதிலளிக்கும் வகையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள அவருடைய வீட்டில் இருந்து வேல் யாத்திரையை தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். இதற்காக பிரத்யேகமான யாத்திரை வண்டி அமைக்கப்பட்டு அதில் பாஜக தலைவர் எல்.முருகன் திருத்தணி வரை செல்ல இருப்பதாக தெரிகின்றது. இதில் பாஜக தேசிய, மாநில தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

தடையை மீறி பாஜக வேல் யாத்திரை நடத்துவதால் தமிழக பாஜக தலைவர் முருகன் வீட்டில் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கொட்டும் மழையில் எல். முருகன் வீட்டின் முன்பு பாஜக தொண்டர்களும் வந்து கொண்டு இருக்கின்றனர்.

மாநில துணைத்தலைவர் விபி துரைசாமி, கட்சியினுடைய பொதுச் செயலாளர் நாகராஜன், மூத்த நிர்வாகிகள் என அனைவரும் குழுமியுள்ள அந்த இடத்தில் துள்ளிவரும் வெற்றிவேல், முருகனுக்கு அரோகரா என்ற கோஷங்களை எழுப்பி தற்போது வேல் யாத்திரை திருத்தணி நோக்கி கிளம்பியுள்ளது.

Categories

Tech |