செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒன்னும் இல்லாததுக்கெல்லாம் சவுக்கு சங்கரை கைது பண்ணுகிறீர்கள். குருமூர்த்தி ஐயா கணக்காளர் அவர் நீதிபதிகளை பற்றி பேசிய காணொளியை அனுப்பட்டுமா ? அவரைவிட யாரும் நீதிபதிகளை பேச முடியுமா ? அரசியல்வாதிகளின் கால பிடிச்சு, கைய புடிச்சு அதுல தான் நீதிபதிகள் வராங்க அப்படின்னு பேசியதற்கு, அவர்களெல்லாம் ஏன் தொடல ?
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சந்தேகத்தின் பேரில் இஸ்லாமியர்களை கைது செய்யக்கூடாது. பாஜகவினர் தமிழ்நாட்டை குறி வைக்கிறார்கள். தமிழ்நாட்டை குறி வைத்து அவர்கள் பேசுவது எல்லாம் பாருங்கள்.. கோவில்கள் எல்லாம் தனியார் மையப்படுத்தணும்னு சொல்றாங்க. அரசு கையில் இருக்கும்போதே ஆயிரத்துக்கு அதிகமான சிலை காணாம போயிட்டு.
நான் என்ன சொல்றேன்… நாம தனியார் கையில் கோவிலை குடுத்துடுவோம். திருப்பதி வெங்கடாஜலபதி, ஐயப்பன் கோயிலையும் அவங்க எடுத்துட்டு வந்துட்டாங்கன்னா நாம கோவிலெல்லாம் கொடுத்துடுவோம். மக்களுக்குள் பிரச்சனைகளை உருவாக்கி, மக்களுக்குள்ள மத வெறியை தூண்டி, தமிழகத்தை சுக்காக சிதைப்பதை தவிர வேற ஒரு எண்ணமும் கிடையாது.
ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு தடை செய்ய திருமாவளவன் தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்காது என எனக்கு தெரியும். அதனால தான் நீதிமன்றத்துக்குள்ள என் தம்பி எல்லாம் இருந்து நான் கூட வழக்கு போடல. அங்கே இருக்கிறது யார் என்று எனக்கு தெரியும் ? இவர்கள் என்ன மாதிரியான தீர்ப்பு கொடுப்பார்கள் என்று எனக்கு தெரியும். அதனால இதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.