Categories
அரசியல் மாநில செய்திகள்

”மதத்தை அளவுகோலாக வைக்கும் பாஜக”திருமாவளவன் ஆவேசம் …!!

மதத்தை அளவுகோலாக வைத்திருக்கிறது பாஜக அரசு என்று திருமாவளவன்  ஆவேஷமாக தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் பேசுகையில்  , சிஐஏ எதிர்ப்பதற்கு முக்கியமான காரணம் மதத்தை அளவுகோலாகக் கொண்டு இந்த சட்டம் இயக்கப்பட்டு இருக்கிறது. இது முழுக்க முழுக்க அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த ஒரு யுத்தியாகவே இதை கையாளுகிறது பிஜேபி.

இதுவரை எந்த அரசும் , எந்த காலத்திலும் மதத்தை ஒரு அளவுகோலாக யாரும் கையாண்டது இல்லை. அகதிகளாக வந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும். ஆனால் மோடி அரசு , அமித்ஷா அரசு மனிதாபிமானத்தை அளவுகோலாக வைக்கவில்லை , மதத்தை அளவுகோலாக வைக்கின்றது என்று தெரிவித்தார்.

 

Categories

Tech |