Categories
அரசியல் மாநில செய்திகள்

தாங்களாகவே குண்டு வீசும் பாஜகவினர்…. இந்துத்துவ கும்பலின் சதி… அறிக்கை மூலம் ஷாக் கொடுத்த சீமான் …!!

மதவாத சக்திகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் தெரிவித்திருக்கிறார்.

சமூக அமைதியை கெடுக்கும் வகையில் தமிழகத்தில் பெரும் மதக்கலவரங்களை ஏற்படுத்த திட்டமிடும் மதவாத சக்திகளை உடனடியாக கடும் நடவடிக்கை எடுத்து ஒடுக்க வேண்டும் என்ற தலைப்பில் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  நாடெங்கிலும் மத பூசல்கள் ஏற்பட்ட போது கூட அமைதி பூங்காவாக திகழ்ந்த தமிழகத்தில் மதக் கலவரங்கள் ஏற்படுத்துவதற்கென இந்துத்துவ இயக்கங்கள் செய்யும் பிரித்தாலும் சூழ்ச்சிகள் பெரும் அதிர்ச்சியை தருகிறது.

திட்டமிட்ட சதி:

ஒருபுறம் இஸ்லாமிய இயக்கங்கள் குறிவைத்து தேசிய புலனாய்வு முகமையும், அமலாக்கத்துறை விசாரணை, கைது என அதிகாரபலத்தின் மூலம் வேட்டையாடிக் கொண்டிருக்க, மறுபுறம் மாநில முழுக்க 50 இடங்களில் ஊர்வலம் நடத்துவதற்கு ஆர்எஸ்எஸ் இயக்கம் தயாராகிக் கொண்டிருப்பது திட்டமிட சதியின் செயல்பாட்டு வடிவமே ஆகும்.

ஆர்.எஸ்.எஸ்:

திமுக அரசு உயர்நீதிமன்றத்தில் வலுவான வாதங்களை வைக்காது விட்டதின் விளைவாகவே ஆர்எஸ்எஸ்சின் பேரணிக்கு அனுமதி பெறப்பட்டிருக்கிறது என்பது உறுதியாகி இருக்கும் நிலையில்,  மதவாதத்தை எதிர்ப்பதாக பேச்சளவில் மட்டும் கூறிக்கொண்டு,  ஆட்சி நிர்வாகம், சட்ட போராட்டம் என செயல்பாட்டளவில் பாஜகவோடு இணங்கி போகும் திமுக அரசின் பாதக செயல் பச்சை சந்தர்ப்பவாதமாகும்.

பெட்ரோல் குண்டு:

தென் மாநிலங்களே தங்களது இலக்கென பாஜகவின் தலைவர் பெருமக்கள் கூறிவரும் நிலையில், அதற்கு அடித்தளம் இடும் வகையில் தமிழகத்தில் மதமோதல்கள், கும்பல் வன்முறைகளையும் ஏற்படுத்த இந்துத்துவ இயக்கங்கள் முயற்சிக்கிறதோ ? என்னும் ஐயம் வழுக்கின்றது. ஆங்காங்கே ஆர்எஸ்எஸ், பாஜக நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகவும், வாகனம் எரிக்கப்பட்டதாகவும் வருகின்ற செய்திகள் கடந்த காலத்தையே நினைவூட்டுகின்றன.

இந்துத்துவ கும்பல்:

தாங்களாகவே தங்கள் வீடுகளில் பெட்ரோல் குண்டை வீசி தங்களது வாகனத்தை எரித்து அரசியல் லாபமீட்ட முயன்ற பாஜகவின் நிர்வாகிகளது முந்தைய செயல்பாடுகள் யாவும் சமகால சான்றுகளாக இருக்க, அதன் தொடர்ச்சியாக இதுவும் இருக்கலாம் எனும் வாதத்தில் உண்மை  இல்லாமல் இல்லை. வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு பெரும் மதக் கலவரத்தை தமிழகத்தில் ஏற்படுத்த திட்டமிட்டு வரும் இந்துத்துவ கும்பலின் சதிகளுக்கு இரையாகாது,  தமிழக அரசு விழிப்போடு செயல்பட வேண்டி செயல்பட்டு, சமூக அமைதியும், மத நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட வேண்டியது அரசின் தார்மீக பொறுப்பும், கடமையுமாகும்.

கடும் நடவடிக்கை:

ஆகவே இவ்வகாரத்தில் தமிழக முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள் சிறப்பு கவனம் செலுத்தி, மத பிளவுகளும்,  வன்முறைகளுக்கும் நடைபெறா வண்ணம் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும்,  பாதுகாப்பு ஏற்பாடுகளையும் துரித படுத்த வேண்டும் எனவும்,  தமிழகத்தில் மதக் கலவரங்களை ஏற்படுத்த திட்டமிட்டும் மதவாத சக்திகளை உடனடியாக கடும் நடவடிக்கை எடுத்து ஒடுக்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்  என சீமான் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.

Categories

Tech |