கூட்டணியை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம் என தமிழக பாஜக நிர்வாகிகளுடனான ஆலோசனையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.
இன்று தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பல்வேறு நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பங்கேற்ற இந்த பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டன. குறிப்பாக சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் தான் அதிமுக கூட்டணி என்று உறுதி செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து அமித் ஷா தங்கி இருக்கும் நட்சத்திர விடுதியான லீலா பேலஸில் முதல்வர், துணை முதல்வர் சந்தித்து ஆலோசனை செய்ததை தொடர்ந்து, பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா பேசினார். அப்போது, பூத் கமிட்டி வலுப்படுத்தும், தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த பாஜகவினருக்கு அமித்ஷாவை அறிவுரை வழங்கினார். மேலும், கூட்டணி அமைப்பதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் தேர்தல் பணிகளை கவனியுங்கள்.
பல மாநிலங்களில் பின் தங்கியிருந்த நிலையில் தற்போது பாஜக ஆளும் மாநிலங்களாக மாற்றிக் காட்டியுள்ளோம். மற்ற மாநிலங்களைப் போன்று தமிழகத்திலும் தொண்டர்கள் உழைக்க வேண்டும். இப்போது இருந்தே நீங்கள் உழைத்தால் அடுத்த 5 ஆண்டில் தமிழகத்தில் பாஜக ஆட்சி வரும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா பாஜக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.