Categories
அரசியல் தேசிய செய்திகள்

“அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா”… பட்னாவிஸின் பழைய ட்வீட்டை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!!

தேசியவாத காங்கிரஸுடன் ஏற்பட்ட கூட்டணியால் மீண்டும் மகாராஷ்டிர முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள தேவேந்திர ஃபட்னாவிஸின் பழைய ட்விட்டர் பதிவு ஒன்று சமூக வலைதளத்தில் கேலிக்குள்ளாகியுள்ளது.

மகாராஷ்டிராவில் நீண்ட நாட்களாக நடைபெற்ற அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், யாரும் எதிர்பாரா விதமாக பாஜக, தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து அம்மாநிலத்தில் ஆட்சி அமைத்தது. மாநிலத்தின் முதலமைச்சராக மீண்டும் தேவேந்திர ஃபட்னாவிஸே பதவியேற்றுக் கொண்டார். துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் பதவியேற்றுக் கொண்டார். இந்நிகழ்வு தேசியவாத காங்கிரஸ், சிவசேனா தொண்டர்களுக்கிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Image

தேர்தலுக்கு முன்னதாக பாஜக சார்பில் பரப்புரை மேற்கொண்ட ஃபட்னாவிஸ் தேசியவாத காங்கிரஸ் கட்சியையும், சரத் பவார் மற்றும் அஜித் பவாரையும் மிகக் கடுமையாக விமர்சித்து வந்தார். ஊழல் பெருச்சாளிகள் போன்ற கடும் சொற்களால் இருவரையும் தாக்கி ஃபட்னாவிஸ் பரப்புரை செய்தார். ஆனால், தற்போது ஃபட்னாவிஸ் ஆட்சிக் கட்டிலில் அமர்வதற்காக அக்கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

Image

அதேபோல, 2014ஆம் ஆண்டு ஃபட்னாவிஸின் ட்விட்டர் பதிவு தற்போது கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. அந்தப் பதிவில், “ பாஜக ஒருபோதும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்காது. சட்டப்பேரவையில், நாங்கள் அவர்களின் ஊழலை அம்பலப்படுத்தினோம். அப்படியிருக்கையில், அக்கட்சியுடன் நாங்கள் கூட்டணி அமைப்பதாகக் கூறுவது பொய்” என்று கூறியுள்ளார்.

Image

ஃபட்னாவிஸின் பழைய ட்வீட்டை எப்படியோ தோண்டி எடுத்த சமூக வலைதளவாசிகள், அவரை கேலி செய்து வருகின்றனர். ’அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா’ என்ற கவுண்டமணியின் வசனத்திற்கு ஏற்றார் போல் ஃபட்னாவிஸின் அப்போதைய ட்வீட்டும், தற்போதைய செயலும் உள்ளது.

Categories

Tech |