Categories
தேசிய செய்திகள்

இமாச்சலில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சியில் நீடிக்கும்….. முதல்வர் ஜெயராம் தாக்கூர் திட்டவட்டம்….!!!!!

இமாச்சல் பிரதேசத்தில் வருகிற 12-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் டிசம்பர் 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும். மாநிலத்தில் கடந்த 1982-ம் ஆண்டு முதல் பாஜக மற்றும் காங்கிரஸ் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகிறது. இமாச்சல் பிரதேசத்தில் தற்போது காங்கிரஸ், பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே பாஜக ஆட்சியில் இருக்கும் நிலையில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவர் பிரச்சாரத்தின் போது கூறியதாவது, ‌ காங்கிரஸ் கட்சியினர் பொய்யான பிரச்சாரங்களை கூறுகிறார்கள். அடுத்த 25 வருடங்களுக்கு கண்டிப்பாக பாஜக மட்டும் தான் ஹிமாச்சலில் ஆட்சியில் அமரும். ஆட்சிக்கு அமர்ந்தால் பெண்களுக்கு 1500 ரூபாய் கொடுப்போம் என்று கூறியுள்ளார்கள். ஆனால் காங்கிரஸ் ஆட்சி புரியும் ஏதாவது ஒரு மாநிலத்தில் பெண்களுக்கு 1500 ரூபாய் மாதம் தோறும் கொடுக்கிறார்களா? ஆனால் பிரதமர் நரேந்திர மோடி மட்டும் தான் மக்கள் நலனுக்காக பாடுபடுகிறார். பாஜக மீண்டும் ஆட்சி அமர்ந்தால் இமாச்சலில் வளர்ச்சியானது நல்ல நிலையில் இருக்கும். தேர்தல் நடைபெறும் சமயத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி கலந்து கொள்வதை சொந்த கட்சியினரே விரும்பவில்லை. இதனால்தான் அவரை பாதை யாத்திரைக்கு அனுப்பி வைத்து விட்டார்கள். குஜராத்தில் பாஜக 2 தசாப்தங்களாக ஆட்சி நடத்தி வருகிறது. இதேபோன்று இமாச்சலில் மீண்டும் ஆட்சியில் அமர முடியாதா? மேலும் நவம்பர் 12-ஆம் தேதி பதிவாகும் ஒவ்வொரு வாக்கும் அடுத்த 25 வருடங்களுக்கு மாநிலத்தின் வளர்ச்சியை தீர்மானிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரத்தின் போது கூறியதையும் சுட்டிக்காட்டி முதல்வர் பேசினார்.

Categories

Tech |