பாஜகவினர் ஜாதி கட்சியை அதிகமாக நம்புவார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரிக்கலாம். ஆனால் இவங்களோட திட்டம் காஷ்மீரை போல இரண்டாக உடைக்க வாய்ப்பு உள்ளது. சாதி கட்சிகளை அதிகமாக நம்புவார்கள் பாஜகவினர். அவங்களுக்கு வடதமிழகம் , தென் தமிழகம் என்று பிரித்து சென்னையை புதுச்சேரி போல ஒரு யூனியன் பிரதேசமாக மாறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
இது அவசியமற்றது.இவர்கள் இரண்டாக பிரிக்க வேண்டுமென்றால் நியாயமாக உத்தரப் பிரதேசத்தை தான் பிரிக்க வேண்டும். அங்கு 403 தொகுதி இருக்கிற பெரிய மாநிலம் அது தான். மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்துக் கொள்ளலாம்.தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் நோக்கம் அவசியமற்றது அதை நங்கள் அனுமதிக்க போறதும் கிடையாது என்று சீமான் தெரிவித்துள்ளார்.