கோவா மாநிலத்தில் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்க வைத்துள்ளது பாரதீய ஜனதா கட்சி .
கோவா மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் (63 வயது ) . இவர் கடந்த ஒரு வருட காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மனோகர் பாரிக்கர் மரணத்தையொட்டி கோவா மாநிலத்தின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் மஹாராஷ்டிரவாடி கோமன்டாக் கட்சி மற்றும் கோவா பார்வேர்ட் கட்சி ஆதரவுடன் முதல்வராக தேர்வானார். மேலும் ஆதரவு தெரிவித்த கூட்டணி கட்சியில்தலா ஒருவருக்கு என மொத்தம் இருவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.
தற்போது 36 சட்ட பேரவை உறுப்பினர்கள் கொண்ட கோவா சட்டப் பேரவையில் பிஜேபி அரசு பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தொடர 19 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் 20 உறுப்பினர்களின் ஆதரவை பெற்று பாஜக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது . இந்நிலையில் கோவா முதல்வராக பிரமோத் சாவந்த்_தும் , கோவா பார்வேர்ட் கட்சியை சேர்ந்த விஜய் சர்தேசி மற்றும் மஹாராஷ்டிரவாடி கோமன்டேக் கட்சியை சேர்ந்த சுதீன் தவலிகர் ஆகியோர் துணை முதல்வர்களா_வும் ஆட்சியை தொடர்கின்றனர்.