Categories
அரசியல் தேசிய செய்திகள்

திரிபுரா உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. 85 % இடத்தில் போட்டியின்றி தேர்வு…!!

திரிபுராவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மற்ற கட்சியினரை வேட்பு மனுத்தாக்கள் செய்யவிடாமல் பாஜக அட்டகாசம் செய்ததாக குற்றம் சாட்டுகின்றனர்.

இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் இருக்கும் மாநிலமான திரிபுராவில் மொத்தமுள்ள 6,646 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகின்ற 27_ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. இதில் ஆளும் பாஜக , காங்கிரஸ், ஏற்கனவே ஆட்சி செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்த தேர்தலில் சுமார் 12, 03, 070 பேர் வாக்களிக்க இருக்கின்றனர்.

Image result for திரிபுரா bjp vs cpim

இதையடுத்து இங்குள்ள 6,646 உள்ளாட்சி இடங்களில் 5, 652 இடங்களில் ஆளும் பாஜக கட்சி வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இது மொத்தமுள்ள உள்ளாட்சி இடங்களில் 85 சதவீதம் ஆகும்.இது குறித்து அங்குள்ள காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி  தெரிவிக்கையில் பாஜக கட்சியினர் மற்ற கட்சியினரை வேட்புமனுத்தாக்கள் செய்ய விடாமல்  தடுத்ததாக குற்றம் சாட்டுகின்றனர்.

Categories

Tech |