Categories
தேசிய செய்திகள்

”அருண் ஜெட்லி மருத்துவமனையில் அனுமதி” கவலையில் பாஜகவினர் ..!!

உடல்நலக்குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அனுமதிக்கப்பட்டுள்ளது பாஜகவினரை கவலையடைய வைத்துள்ளது.

உடல்நலக் குறைவு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் , பெரு நிறுவன விவகார துறை அமைச்சராகவும் இருந்தவர் அருண் ஜெட்லி. கடந்த தேர்தலில் கூட உடல்நல குறைவு காரணமாக தனக்கு ஓய்வு வேண்டுமென்று தேர்தலில் போட்டியிடாமல் தவிரத்தார்.

Image result for அருண் ஜெட்லி

கடந்த ஏப்ரல் மாதத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த காலத்தில் கூட சிறுநீரக கோளாறு தொடர்பாக இவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது பொறுப்பு நீதி அமைச்சராக பியூஸ் கோயல் இருந்து பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.இந்நிலையில் தற்போது அருண் ஜெட்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தது பாஜகவினரை கவலையடைய வைத்துள்ளது.

Categories

Tech |