கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பான வழக்கு NIA விசாரணையில் நடந்து வருகின்றது. இதற்கிடையே பாஜக கோவையில் பந்த் அறிவித்தது. அதற்க்கு தடைகேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் கோவை மாவட்ட ”பாஜக பந்த் அறிவிப்புக்கு” தமிழக மாநில தலைமை ஒப்புதல் அளிக்கவில்லை என்று கோர்ட்டில் பாஜக மாநில தலைவர் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று பாஜக பந்த் அறிவிப்பு இல்லை என்று அறிக்கையே விட்டது.
இதனிடையே நேற்று முன்தினம் இஸ்லாமிய அமைப்புகள் கோவை காவல் ஆணையரை சந்தித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசும் போது, கோவையில் வருகின்ற 31ஆம் தேதி பிஜேபி சார்பில் சங்கபரிவார் அமைப்பின் சார்பில் அறிவித்திருக்கக்கூடிய பந்த் ஒரு சமூக மக்கள் மத்தியில் ஒரு பெரிய பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனா காலங்களில் கடந்த மூன்று ஆண்டு காலமாக எந்த வியாபாரமும் இல்லாமல் வியாபாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி இருந்தார்கள்.
அதைத் தாண்டி இன்று தான் வியாபாரங்கள் எல்லாம் ஓரளவுக்கு சரி செய்து மக்களெல்லாம் சரி வரக்கூடிய நேரத்தில் இதுபோன்று பந்த் அறிவித்து, அதன் வாயிலாக ஒரு கலவர சூழ்நிலை உருவாகிவிடுமோ என்ற அச்சம் எங்களைப் போன்றவர்களுக்கு இருக்கிறது. அதற்கு கடுமையான பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக வலியுறுத்தி வந்திருக்கிறோம் என தெரிந்தனர்.